பொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.

This entry is part 9 of 29 in the series 20 மே 2012

நண்பர்களே, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற தமிழின் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமைகளை கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட ரவிசுப்ரமணியன் அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். என்னிடம் ஜெயகாந்தன் ஆவணப்படத்தை பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்த மூன்று ஆளுமைகளின் ஆவணப்படத்தையும் ரவிசுப்ரமணியன் தன்னுடைய இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த மூன்று ஆவணப்படங்களையும் நான் பொக்கிஷம் என்றே சொல்வேன். இந்த ஆவணப்படங்களை இலவசமாக ரவிசுப்ரமணியன் அவர்கள் இணையத்தில் பார்க்கலாம். எனவே இனியும் […]

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

This entry is part 8 of 29 in the series 20 மே 2012

30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது: கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடி இருப்பதுண்டோ? இந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை […]

சுந்தர் சி யின் “ கலகலப்பு “

This entry is part 7 of 29 in the series 20 மே 2012

சிறகு இரவிச்சந்திரன். ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்குப் பிறகு இன்னொரு வெற்றியைத் தொட்டிருக்கிறார் சு.சி. வெற்றிக்குக் காரணம்? இவரிடம், ஏதோ உலகமகா சினிமா காட்டப்போகிறேன், என்கிற பாசாங்கு எல்லாம் இல்லை. பெரிய நட்சத்திரப் பட்டாளம் இல்லை. எல்லாம் இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை நடிகர்கள், நடிகைகள். வசனம் எழுதிய பத்ரிக்கு நகைச்சுவை நன்றாக வருகிறது. சுந்தருக்கு ஸ்லாப்ஸ்டிக் காமெடி பலம் உண்டு. முகத்தை, அஷ்டகோணல் ஆக்கிக் கொள்ளாமல், இயல்பாக நடிக்க, நடித்தவர்களுக்குத் தெரிகிறது. பிறகென்ன? சூப்பர்டூப்பர் ஹிட் தான். அதிலும் […]

திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்

This entry is part 6 of 29 in the series 20 மே 2012

ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)

This entry is part 5 of 29 in the series 20 மே 2012

++++++++++++++++++++ ஒரு மாதின் காதலன் ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

முள்வெளி அத்தியாயம் -9

This entry is part 4 of 29 in the series 20 மே 2012

“சங்கீத் .. நீ ஒரு ‘பெக்’ எடுத்துக்கறியா?” என்றாள் லதா. “நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. ” “கமான். ஹியர் யூ ஆர் மை ப்ரெண்ட். நாட் மை கைனி. ஒகே?” “லுக் லதா. ஆஸ் அ டாக்டர் மட்டும் நான் இதைச் சொல்லலே. டூ யூ வாட்ச் யுவர் பிகர் இன் த மிர்ரர்?” லதா சில நொடிகளுக்குப் பிறகு […]

தாகூரின் கீதப் பாமாலை – 14 இளமங்கைக்குப் புரியமா ?

This entry is part 3 of 29 in the series 20 மே 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதுபோன்ற நாளொன்றில் அவளுக்கு எடுத்துச் சொல்ல ஏதுவானது வானிருண்டு முகில் திரண்டு பேய் மழை கொட்டும் வேளையில் ! இதுபோன்ற நாள் ஒன்றில் என் மனம் திறந்து காட்ட ஏதுவானது பரிதி மேகத்தில் மறைந்து ஒளிமங்கிய போர்வைக் குள்ளே இடி முழக்கும் முகிலுக்கும் தடமிட்டுச் சடசடக்கும் சப்த மழைக்கும் இடையே ! வேறெவர் காதிலும் வீழாது இந்த வார்த்தை ! ஏகாந்தம், நிசப்த அந்தரங்கம். […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-2)

This entry is part 2 of 29 in the series 20 மே 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உழவரை மறக்காத உழவுக் கவிஞராக மக்கள் கவிஞர் விளங்கினார். உழவன் வாழ்வு உன்னத வாழ்வு என்று எழுதினார். அதனால்தான், ‘‘நல்லவர் செய்த செயல்களிலே – பயிர் நாட்டியமாடுது வயல்களிலே’’ என்று உலகத்தாருக்கு உணவிடும் உழவனே, மற்றவருக்கு உதவும் பண்பு கொண்ட உழவனே நல்லவன் என்று உலகத்திற்குப் பறைசாற்றுகின்றார். நடிப்பிற்காகக்கூட உழவர்களை இழிவாக நடத்தத்தெரியாதவர் மக்கள் கவிஞர். ‘‘1954-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -13

This entry is part 1 of 29 in the series 20 மே 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ்வையம் தழைக்குமாம் மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம் ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் அச்சம், நாணம் விடுத்து, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் ஞானச் செருக்குடன் இருக்கும் பெண், ஆண்மக்களும் போற்றிட வாழ்வர் என்பதையும் கூறியுள்ளார். பெண் விடுதலை என்ற பேச்சு வந்தாலே அங்கே பாரதியைப் பார்க்கலாம். பட்டங்கள் […]