வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 11

This entry is part 14 of 14 in the series 7 மே 2017

  ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 11.       தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன் தாஸ் அவனைப் பார்த்ததும் கைகளை முகத்திலிருந்து அகற்றிக்கொண்டு புன்னகை புரிகிறார். முகத்தில் புன்னகை தோன்றிய போதிலும் அவரது பார்வை ஒரு கூர்மையுடன் பிரகாஷின் மீது பதிந்திருக்கிறது. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பிரகாஷ் அதில் […]

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15

This entry is part 13 of 14 in the series 7 மே 2017

  பி.ஆர்.ஹரன் நமது பாரத தேசத்துக் கலாச்சாரத்துடனும் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மிகவும் ஒன்றி இரண்டறக் கலந்துள்ளது யானை. வேத, இதிகாச, புராணங்களில் ஆரம்பித்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அனைத்திலும் யானைகள் பற்றிய குறிப்புகள் எராளமாகக் காணக் கிடைக்கின்றன. ஹிந்து மதத்தில் எட்டு திசைகளையும் எட்டு யானைகள் பாதுகாப்பதாய் சொல்லப்படுகின்றது. அவைகளே “அஷ்டதிக்கஜங்கள்” என்று சொல்லப்படுகின்றன. கிழக்கு திசைக்கு ஐராவதம், தென்கிழக்கு திசைக்குப் புண்டரீகம், தெற்கு திசைக்கு வாமனம், தென்மேற்கு திசைக்கு குமுதம், மேற்கு திசைக்கு அஞ்சனம், […]

இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது

This entry is part 1 of 14 in the series 7 மே 2017

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதிச் சூழ்வெளி சூடேற்றி உலோகத்தை உருக்கிடும் உஷ்ணம் ! ஆமை வேகத்தில் தானே சுற்றும் தன்னச்சில் சுக்கிரன் ! ஆனால் அதன் வாயு மண்டலம் அசுர வேகத்தில் சுற்றும் ! பூமிக்குப் பிறை நிலா போல் குறை […]

தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

This entry is part 2 of 14 in the series 7 மே 2017

  முருகபூபதி — அவுஸ்திரேலியா ” நாகம்மா….  ஒரு   தாம்பாளமும்   செவ்வரத்தம்   பூவும்   கொண்டு  வாரும் “ குரல்   கேட்டு  ஓடோடி   வருகின்றார்    எங்கள்   இரசிகமணி    கனகசெந்திநாதனின்    மனைவி.     எம்மைப் பார்த்து  அமைதியான   புன்னகை. ” இவரைத்  தெரியும் தானே..? –   இது   முருகபூபதி.    இவர்   தம்பி   செல்வம்.  இவர்    தம்பையா.    இங்க   பாரும்….  இன்றைக்கு   எங்கட   வீட்டுக்கு    ஒரு தமிழரல்லாத    தமிழ்க்கவிஞர்    வந்திருக்கிறார்…  இவர்தான்    மேமன்கவி. “ கனகசெந்திநாதன்     அமர்ந்தவாறு    அனைவரையும்    இல்லத்தரசிக்கு அறிமுகப்படுத்துகிறார். மேமன்கவி   […]

திடீர் மழை

This entry is part 3 of 14 in the series 7 மே 2017

மணிகண்டன் ராஜேந்திரன் சரியாக எட்டு மணிக்கு அலாரம் அடித்தது. எப்போதும் ஜீவன் காலை எட்டு மணிக்கு பிறகுதான் எழுந்திருப்பான்.பண்டிகை விசேஷ தினங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இரவு முழுவதும் மின்விசிறி கக்கிய அனல் காற்றும் கொசுக்கடியும் அவனுக்கு இன்று எட்டு மணிக்கு முன்பே விழிப்பு வர வைத்துவிட்டது. இருந்தும் படுக்கையை விட்டு எழாமல் அலாரம் அடிக்கட்டும் என்று காத்திருந்தான். கை கால்களை விறைப்பாக நீட்டி உடம்பை திமிர் முறித்து வாயில் ஊறியிருந்த எச்சிலை சன்னலின் வழியே […]

இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு

This entry is part 4 of 14 in the series 7 மே 2017

  பி.லெனின் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நுழைவு இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. திராவிட மொழிக்குடும்பம் உலக மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பார்வையில் தொன்மையும் சிறப்பும் மிக்கதாய் விளங்குகிறது. ஏனெனில் இம்மொழிக்குடும்பம் தாம் செம்மையான இலக்கிய வளமும் வளமிக்க தொன்மையான இலக்கணங்களையும் கொண்டுள்ளது. எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் மொழியின் அமைப்புடன் தனியெழுத்துக்கள் சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்தமைதி என்பவற்றுடன் எழுத்துக்கள் இவை இவ்வெண்ணிக்கையுடன் என்று […]

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

This entry is part 5 of 14 in the series 7 மே 2017

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா *14/5/17 ஞாயிறு, காலை 10 மணி. முதல் . மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்கள்: – கவிஞர் இந்திரன் , சென்னை ( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் ) – கவிஞர் […]

தொடுவானம் 168.பறந்து சென்ற பைங்கிளி

This entry is part 6 of 14 in the series 7 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 168.பறந்து சென்ற பைங்கிளி அவன் பெயர் புருஷோத்தமன். அவன் அவள் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளான் என்பது அவனின் பேச்சில் வெளிப்பட்டது. அதனால்தான் அவளை இழந்துவிட விரும்பாமல் உடன் லண்டனிலிருந்து ஓடோடி பறந்து வந்துள்ளான். முறைப்படிப் பார்த்தால் மேரி அவனுக்குதான் சொந்தம். சமுதாய வழக்கப்படி நிச்சயம் செய்துள்ளனர். அப்போது அவனைப் பார்த்து சம்மதம் தெரிவித்திருப்பாள். இப்போதோ அவள் என்னிடம் பழகியதால் அவனை வேண்டாம் என்கிறாள். இது இயல்பானதுதான். இந்த நிலை பல பெண்களுக்கு […]

காணாமல் போனவர்கள்

This entry is part 7 of 14 in the series 7 மே 2017

சுப்ரபாரதிமணியன் ரகீம் அடித்த பந்து சாலமன் வீட்டு முகப்பில் போய் விழுந்தது. இன்னும் நாலடி தப்பி இருந்தால் வாசலில் நின்றிருந்த காரின் மீது பட்டிருக்கும். சாலமனின் தாத்தா வாசலுக்கு வந்து கையை புருவங்களின் மீது வைத்து தூரமாய் பார்த்தார். அவர் கையிலிருந்த செய்தித்தாள் மனிஷா கொய்லராவிற்கு இரண்டாம் திருமணம் பற்றியும், ராஜராஜ சோழனுக்கு ஆயிரம் ஆண்டு விழா பற்றியும் முகப்புச் செய்திகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. நடிகை ஒருத்தியின் கற்பக்கலைப்பு ரகசியம் மீறி செய்தியாய் கசிந்திருந்தது. அதைப்படித்து விட்டு […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 8 of 14 in the series 7 மே 2017

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [58] இரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில் ஊழ் மனிதரோடு மீளா புரிக்கு விளையாடும் இங்குமங்கும் நகரும், கூடும், கொல்லும், பின் ஒவ்வொன்றாய்க் கல்லறையில் வைக்கும். [58] ‘Tis all a Chequer-board of Nights and Days Where Destiny with Men for Pieces plays: […]