தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

நீங்காத நினைவுகள் – 22

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

அத்தியாயம்-8 துவாரகா வாசம். ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர்.…

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

நவம்பர் - டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் - ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி - ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில்…

ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்

15. நரகமாகிப் போன மாயலோகம்   சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார்.  சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார்.   உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான்.   “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை.   உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது.  அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை.  சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார்.  தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார்.   “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு.  “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும்.  நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான்.  நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன்.  அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார்.   தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார்.   “நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம்.  அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..”   சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம்.  பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார்.   “ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா.  மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார்.…

வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

- நரேந்திரன்   பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத்…

மரண தண்டனை எனும் நரபலி

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற…

அறிவியல் தொழில்நுட்பம்

ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 1.  http://www.bbc.co.uk/news/world-24826253 [Video of Launching India's Mars Mission] 2.  http://www.isro.org/mars/updates.aspx  [Mars Orbiter Status Update]  3.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx  [Pre-Launch Updates]…

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver

மருத்துவக் கட்டுரை             கல்லீரல் கரணை நோய்                                                                 Cirrhosis Liver            உடல் உறுப்புகளில் முக்கியமானது கல்லீரல். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகிறது. ஆனால் மது அருந்துவோருக்கு கல்லீரல்…

இலக்கியக்கட்டுரைகள்

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச்…

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை     மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம்.…

நுகம்

 - சிறகு இரவிச்சந்திரன் படித்த, இன்றைய சமுகக் கட்டமைப்பு மேல் கடும் கோபம் கொண்ட ஒரு இளைஞனை, தன் நாச வலைக்குள் இழுக்கிறது ஒரு அயல்நாட்டு தீவிரவாத கும்பல். பணத்தாசை காட்டி, இந்திய வெளியுறவு…

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்

முனைவர் ந.பாஸ்கரன் நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில்,…

கடிதங்கள் அறிவிப்புகள்

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013 பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேனா கலை…

தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்ச்சிகள். நண்பர்களே எதிர்வரும் சனிக்கிழமை (09-11-2013) ஞாயிற்றுக்கிழமை (10-11-2013) இரண்டு நாட்களும் சென்னையில் முக்கியமான இரண்டு இலக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்விற்கு அன்போடு வரவேற்கிறேன். நிகழ்வு ஒன்று:  …

திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை

கம்பன் உறவுகளே வணக்கம் திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை அனுப்பியுள்ளேன் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். கவிஞா் கி. பாரதிதாசன் Vallalar - 2

சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013

” சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ” ” சேவ் “ அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள்…

கதைகள்

மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2

ஜோதிர்லதா கிரிஜா 2 தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக அவசரமாக எழுந்தாள். “நீ உக்காரும்மா. நான் போய்ப் பாக்கறேன்.,” என்றவாறு அவர்…

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

  ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்      இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள். அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு இருக்கா….எழுந்துட்டா போல இருக்கு…அதான் அழறா…இருங்கோ வரேன்..காவேரி மாமி சொல்லிக் கொண்டே டீ…..மங்களம்……குழந்தையை தூளீலேர்ந்து…

சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

  [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 10 & படம் :…

அதிரடி தீபாவளி!

  பவள சங்கரி   “எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீ?  உனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி…

பனம்பழம்

               டாக்டர் ஜி. ஜான்சன்            பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும்…

அட்டை

பாவண்ணன் வீட்டுக்குள் நுழைந்து அலுவலகப்பையை ஆணியில் மாட்டும்போதே “ரெண்டு தரம் அட்ட வந்துவந்து ஒன்ன தேடிட்டு போனாண்டா” என்றாள் அம்மா. திரும்பி அம்மாவை முறைத்தேன். சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை மேசைமீது வைத்துவிட்டு உட்கார்ந்தேன். “எங்களுக்குள்ள…

நான் யாரு?

நான் யாரு? மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள் "ஏங்க நான் கடைக்கு போய் காய் ஏதாவது வந்திருக்கான்னு பார்த்திட்டு வாங்கி வாரேன். நீங்க வீட்டுக்கு போங்க "…

க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)

க லு பெ   தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி gorthib@yahoo.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com யுசெமிடி பிக்னிக் பயணத்திற்காக கென்னடி நடுநிலைப் பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன. பெற்றோர்கள் எல்லோரும் தம்…

கவிதைகள்

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் முகம் காட்ட மாட்டாள் என்று தான் இந்த சன்னல் கதவுகள் கூட‌…

படித்துறை

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக இருக்கலாம் புகைவண்டியில் உங்களது சுமையை தோளில் சுமக்காதீர்கள் மின்விசிறி ஓடாததால் வியர்வையில்…

விளம்பரக் கவிதை

ஜே.பிரோஸ்கான்  உன் கவிதையொன்றினை படித்தேன் உள்ளம் கவலையாகி நொதிந்தது. அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள் பல முறை விழுந்து நான் தப்பிக்க முடியாமல் தோற்றுப் போனதில் நீ என்னம்மோ சந்தோசிக்கலாம். கவிதை படுகுழி…

என்னுலகம்

- பத்மநாபபுரம் அரவிந்தன் - பன்னீர்க் குடத்துள் மிதக்கும் சிசுவின் ஏகாந்த நிலைபோல என் மனதுள் விரிந்து சுருங்கிச் சுழலும் சலனங்கள்.. சலனங்கள் சங்கமித்து உருக்கொண்டு வெளிவரும் என் வார்த்தைகள் புரியவில்லையென்று சொல்லித் திரியும் நீ…

90களின் பின் அந்தி –

ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின்…

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் பாடும் அந்தக் கானம் யாரை நோக்கியோ  என்று நான் அறியேன் ! புயல் காற்று ஓயாமல் புலம் பெயர்ந்த பறவை போல்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 48 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      …