மந்தைவெளி மரணக்கிணறுகள்

This entry is part 10 of 10 in the series 10 நவம்பர் 2019

கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும் கிணறுகளில். ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது கோர விபத்து. உயிர்பலி ஒன்றோ இரண்டோ – நினைவில்லை. (வரம்போலும் சாபம் போலும் மறதி வாழ்வில்) உறுத்தும் மனசாட்சியை அடக்க மந்தைவெளி பஸ் டெர்மினஸைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் […]

மழைப்பருவத் தொடக்கம்

This entry is part 9 of 10 in the series 10 நவம்பர் 2019

நா. லதா கணித்தனர் சோதிடம் மழைக்கான தொடக்கம் அவளுக்கும் சேர்த்தே மழைவரும் நாளில் மனக்கடலில் ஆரவாரம்  கனவுகள் ஆர்பரிக்க எண்ணங்களின் அலைகள் கரைகளை தொடுவதும் செல்வதுமாக மையல் கொண்ட மழை ஆலிலை கொண்டு சாரலின் கதகதப்பாய் ஆலிங்கனம் செய்திடுமோ முல்லைப்பூவெடுத்து சிலிர்க்கும் மழைத்துளியாய்  மேனியில் வரைந்திடுமோ ஆயிரமிதழ்கொள் மலர்கொண்டவளை வருடும் இசையருவியாய்  துயில்செய்யுமோ துளிர்த்திடும்  முத்துக்களை தம்மிதழ்கொண்ட முத்தத்தால்  சிந்தும் தேன்மழையென துடைத்திடுமோ தினம் தினம்  கொந்தளிப்பில் அவளுக்கான மழைப்பருவம்….  நா. லதா. பி. அ.  ம. […]

சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “

This entry is part 8 of 10 in the series 10 நவம்பர் 2019

* சுப்ரபாரதிமணியனின்  “ அண்டை வீடு “ (  வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன்   . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர்     மாதக்கூட்டம் …03/11/19 ஞாயிறு மாலை.5 மணி..                     ., பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலையில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் உரையில் ;; அண்டை வீடு : பயண அனுபவம் :         திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் […]

மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:

This entry is part 6 of 10 in the series 10 நவம்பர் 2019

     சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை.  தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி […]

முதுமை

This entry is part 5 of 10 in the series 10 நவம்பர் 2019

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி இலையுதிர் காலம் மட்டுமே இனி எதிர்காலம் காதல்கள் சொன்ன மரம் இனி விறகு மறதி இருளின் மையம் தீப நினைவுகள் மரணம் நோய்களோடு போராடும் மாத்திரை வாழ்க்கை இறந்தகாலம் மட்டுமே பேசும் பெருங்காய டப்பா வானவில் மறந்த வானம் தோகையே மீதியாய் கரும்பு அம்புகள் சிறைப்பிடித்த வில் கடலை இழந்த கரை மனித நிலாவின் […]

வள்ளுவர் வாய்மொழி _1

This entry is part 2 of 10 in the series 10 நவம்பர் 2019

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் உத்தரவாதமில்லை யெதுவும். ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு? பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும் அதுவேயாகலாகா தெப்போதும். 1. இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன் நன்று நன்று; வேறென்ன வுரைக்க? 2. நம் சொத்தென் றெம்மைச் சொல்வார் தம் உம் நம் யார்யார்? 3. என் உடையைப் பேசப் புகுமுன் எண்ணுமின் […]

7. தோழி வற்புறுத்தபத்து

This entry is part 7 of 10 in the series 10 நவம்பர் 2019

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது குறித்தும், தலைவனின் அன்பு குறித்தும் கூறி ஆற்றுப் படுத்தும் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தோழியின் கூற்றாக அமைந்துள்ளன. ===================================================================================== 1.வான்பிசிர்க் கருவியில் பிடவுமுகை தகைய, கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே; இனையல் வாழி, தோழி! எனைய தூஉம் நிற்துறந்து அமைகுவர் அல்லர், வெற்றி வேந்தன் பாசறை […]

போர்ப் படைஞர் நினைவு நாள்

This entry is part 4 of 10 in the series 10 நவம்பர் 2019

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் :  ஜான் மெக்ரே (கனடா  போர்த் தளபதி) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போர்த் தளங்களில் அணி அணியாய் பூத்துக் கிடக்கும், எண்ணிலா செந்நிறப் பாப்பி மலர்கள் சிலுவை களுக்கு இடையே ! நெஞ்சை உலுக்கும் காட்சி ! மேலே பாடி பறக்கும் குயில்கள் பயம் ஏதுவு மின்றி, கீழே  பீரங்கிச் சத்தம் மெதுவாய்க் கேட்டு குறையும் ! செத்துப் போனது நாங்கள் ! சில நாட்க ளுக்கு முன்பு பூமியில் சீராய் வசித்தவர் நாங்கள் ! காலைப் பொழுதை உணர்ந்தோம் ! மாலைப் பொழுதில் மங்கிச் செங்கதிர் மறைவதைக் கண்டோம். நேசித்தோம், நேசிக்கப் பட்டோம் நாங்கள் ! இப்போது போர்த்தளப் புழுதியில் வீழ்ந்து கிடக்கிறோம் ! பகைவ ரோடெம் போரைத் தொடர்வீர் ! தளரும் எமது கைகள் தருவது உமது கைக்கு எரியும் தீப்பந் தங்கள் ! ஏந்திக் கொண்டு தாக்குவீர். இறந்தவர் நம்பிக்கை நிறைவே றாது போனால் , உறக்கம் வாரா தெமக்கு , போர்த் தளம் யாவும் எண்ணிலா செந்நிறப் பாப்பி மலர்கள் செழித்துக் குலுங்கினும் ! ++++++++++++++++

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

This entry is part 3 of 10 in the series 10 நவம்பர் 2019

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.நடமாடிய தீபம்இன்று தொங்கும்படமாகிப் போனாள் !விதி வகுத்த வழிஇழுத்துச் செல்லும் எம்மை !பூம்புகார் நகரிலிருந்து விதிதம்பதிகளைத்தள்ளிச் சென்றது போல்என் துணைவிக்குஇறுதி முடிவு ! ++++++++++ அன்னிய மாதர் அனைவரும்,ஒட்டுமில்லை எனக்குஉறவுமில்லை !மருத்துவ மனையில்மனமுடைந்துநான் அழும் போதுஒடிவந்து அணைத்துக் கொண்டுஆறுதல் அளித்த அந்தமருத்துவ மாது !“மனைவி பிழைக்க மாட்டாள்போவென,” என்னைடாக்சியில் அனுப்பிய கனிவுடாக்டர் மாது ! ++++++++++++ மனைவி மரித்து விட்டாள்எனத் தகவல் கேட்டஉடனேஇரங்கல் மடலோடுஏந்தியமலர்க் கொத்தோடுஇருகண்களில்தாரை தாரையாய்க்கண்ணீர் சிந்தஓடிவந்து அணைத்துக் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

This entry is part 1 of 10 in the series 10 நவம்பர் 2019

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்: இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன் தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி மாறப் போகின்றன? இசை படைப்பாளர்களும், தொகுப்பாளர்களும் எந்நிலையில் இருப்பார்கள்? கணினிகளையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவு இசை ஒரு சூனாமியா, மெல் வசந்தமா? பொன்னின் பெருந்தக்க யாவுள !  – நாஞ்சில் நாடன் தனக்கே உரிய வீச்சுடன் பொன், தங்கம், சொர்ணம் […]