வந்துவிடு வனிதா.. !

This entry is part 2 of 23 in the series 27 நவம்பர் 2016

  சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.   தெருவில் சிலர் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.கோடிவீட்டு கோதண்டம் தன் வீடு நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். சரக் .. சரக் என்று கான்கிரீட் தரையில் உராய்ந்துகொண்டு சென்ற அவருடைய சப்பாத்து அடுத்து வந்த மண் தரையில் […]

இரு கோடுகள் (இரண்டாம் பாகம்)

This entry is part 3 of 23 in the series 27 நவம்பர் 2016

தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com எப்போதும் நிதானத்தை இழக்காத அந்தப் பெண்ணின் முகத்தில் பதற்றத்தைப் பார்த்தபோது சாந்தாவுக்கு இரக்கமாக இருந்தது, ஆனால் இது நாலுபேருடன் கூடிய விவகாரம். முதலில் ஐநூறு ரூபாய் வரையில் செலவழித்து இருக்கிறார்கள். அதன் விஷயம் என்ன? எல்லோரும் என்ன சொல்லுவார்கள்? சாந்தாவுக்கு பதற்றத்துடன் பயமும் ஏற்பட்டது. முதல்முறையாய் ஷோபா வகுப்புக்கு மட்டம் போட்டாள். பி.எஸ்.ஸி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவிகளில் முக்கியானவர்கள் மரத்தின் அடியில் கூட்டம் கூடினார்கள். […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 7 இராமசாமி

This entry is part 6 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா   “ராம் நாங்கள் மூவரும் ஊடகவியலாலர்கள். என் பெயர் மகேஷ். எங்களோடு இருக்கும் ஜோன் கனடா தேசத்தில் வேலை செய்யும் ஊட்கவியலாளர். மற்றவர் பெயர் லலித். அவர் கொழும்பில் வெளியாகும்; ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் துணை ஆசிரியர்.  நாங்கள் உம்மோடு பேசவே வந்திருக்கிறோம். எங்களுக்குச் சில நிமிடங்கள் தயவு செய்து ஒதுக்க முடியுமா”, மகேஷ் கேட்டார்.   “ நிட்சயமாக”   “ ஏற்கனவே நேர்ஸ் சாந்தி எங்களுக்கு உம்மைப் பற்றி சொன்னவ. […]

“முள்வேலிக்குப் பின்னால் “ 8 -மார்க்கண்டு

This entry is part 7 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா “ எனது நண்பர் மாரக்கண்டு இவர். முகாமுக்கு வர முன்பு கிளிநொச்சியில்; எலக்டிரிகல் கடை வைத்திருந்தவர். நான் ஏற்கனவே உங்களுக்கு இவரைப்பற்றிச் சொன்னதுபோல்  எங்களுக்கு விடுதலை கிடைத்து நாங்கள் வெளியே வந்ததும், என்னோடு சேர்ந்து பங்குதாரராக பிஸ்னஸ் செய்யப் போகிறார். நான் மேஜர் வின்சன்டை சந்திக்க வேண்டியிருக்கு. அவர் ஒபீசில் ஏதோ எலக்டிரிகல் பிரச்சனையாம். தன்னை உடனே வந்து பார்க்கச்சொல்லி செய்தி அனுப்பியருக்கிறார். நீங்கள் மார்க்கண்டோடு பேசுங்கள். அவரும் என்னைப் போல் ஓரளவுக்கு […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 9 விடுதலை

This entry is part 5 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா மெனிக் முகாமில் இருந்து அனுராதபுரம், புத்தளம் ஊடாக கொழும்புக்குத் திரும்பிய ஜோன் டொரண்டே திரும்ப முன் தனக்கு உதவியோருக்கு ஒரு இரவு விருந்து போசனத்தை கலதாரி ஹொட்டலில் கொடுக்க தீர்மானித்தார். அவரது அழைத்தவர்களின் பட்டியலில் கணவன்மாரும், மனைவிமாரும் அடங்கினர். கனேடிய ஊடகவியலாளர் ஜோன் தான் வநத பணியைத் திருப்தியாகச் செய்து முடித்து, டொரண்டோ திரும்பியவுடன்  நீண்ட மூன்று நாள் தொடர் கட்டுரையை படங்களோடு “முல்வேலி; முகாமுக்குள்;” என்ற தலைப்பில் பத்திரிகையில் வெளியிட்டார் அதை […]

கியூபா – 50 ஆண்டு – புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும்

This entry is part 8 of 23 in the series 27 நவம்பர் 2016

துக்காராம் கோபால்ராவ் புரட்சி அரசாங்கம், நாட்டு மக்களின் ஒப்புதலோடும், நமது அரசாங்க நிறுவனங்களில் உள்ள ஊழலையும், எதேச்சதிகார அதிகாரிகளையும் நீக்கி, நாட்டை முழு தொழில்மயப்படுத்தும். 1.5 பில்லியன் பீ§…¡க்கள் அளவுக்கு உறங்கிக்கிடக்கும் நாட்டின் மூலதன செல்வத்தை தேசிய வங்கி துணையோடு இயக்கத்தில் கொண்டு வரும். நிர்வாகத்தையும் திட்டமிடுதலையும், முழுமையாக அரசியலுக்கு வெளியே உள்ள மிகவும் திறம்வாய்ந்த மனிதர்களின் கையில்கொடுக்கும். – நவம்பர் 30, 1957ல் தி நேஷன் பத்திரிகையில் பிடல் காஸ்ட்ரோ ‘கியூபாவின் புரட்சியாளர்கள் எதனை செய்யப் […]

கியூபாவின் பொருளாதாரம்

This entry is part 10 of 23 in the series 27 நவம்பர் 2016

கியூப அமைப்பு சோவியத் மாதிரியில் உருவாக்கப்பட்ட ‘திட்டமிட்ட பொருளாதார’ வகையைச்சேர்ந்தது. அரசாங்கமே எல்லா தொழில்களுக்கும் சொந்தக்காரர். எல்லோரும் அரசாங்கத்துக்கே வேலை செய்கிறார்கள். பெருத்த சீர்குலைவுக்கும் தட்டுப்பாட்டுக்கும் பிறகு, சமீபத்தில் தனியார் மயப் பொருளாதார இயக்கம் ஆரம்பித்துள்ளது. 2006ல் அரசாங்கத்துக்கு வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 78 சதவிகிதமாகவும் தனியார்துறையில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 22 சதவிகிதமாகவும் இருக்கிறது. (1981ல் அரசாங்கத்துக்கு வேலை செய்தவர்கள் எண்ணிக்கை 91.8 சதம். தனியார் 8.2 சதம்). பொருட்களின் விலை நிர்ணயம் அரசாங்கமேசெய்கிறது. தொழில் […]

திரும்பிப்பார்க்கின்றேன் – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

This entry is part 14 of 23 in the series 27 நவம்பர் 2016

முருகபூபதி  – அவுஸ்திரேலியா கற்றதையும்   பெற்றதையும்   அறிவார்ந்த  தளத்தில் சமூகத்திற்காக  பயன்படுத்திய  பெண்ணிய  ஆளுமை       ”  பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை…? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்…?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் […]

ஸ்மார்ட் போன் இல்லையென்றாலும், சாதாரண போன் மூலமாகவே பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்

This entry is part 9 of 23 in the series 27 நவம்பர் 2016

ஸ்ரீகாந்த் ராமகிருஷ்ணன் (ஸ்வராஜ்யா பத்திரிக்கையிலிருந்து) சமீபத்திய மத்திய அரசாங்கத்தின் 500 ரூபாய், 1000 ரூபாய் நீக்கத்தின் காரணமாக, பணத்தாள் இல்லாமலேயே பணம் கொடுக்கல் வாங்கல் செய்வதன் தேவை பலருக்கும் உறைத்திருக்கிறது. ஆனால்,பலரும் கேட்கும் கேள்வி, “ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் எப்படி பணத்தாள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல் செய்வார்கள்” என்பதுதான். இண்டர்நெட் கனெக்‌ஷன் கொண்ட எந்த ஒரு சாதாரண போனும் இவ்வாறு பணத்தாள் இல்லாமல் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். இதற்கான வசதியை நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் […]

கியூபா சுற்றுலாத்துறை

This entry is part 11 of 23 in the series 27 நவம்பர் 2016

  ஹினெடேரிஸ்மோ(Jineterismo) என்பது செக்ஸ் சுற்றுலா. ஹினெடெராஸ்(jineteras) என்பது விபச்சாரிகளைச் சுட்டும் சொல். கியூபாவில் சுற்றுலாத்துறையே செக்ஸ் சுற்றுலா என்றால் மிகையாகாது. சுற்றுலாவுக்கென தனி கடற்கரை விடுதிகளை கியூபாவின் கம்யூனிஸ்டு அரசு உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு அரசாங்க அனுமதியுடன் மட்டுமே கியூப மக்கள் செல்ல முடியும். இங்கே அனுமதி அளிக்கப்படுபவர்கள் இந்தச் சுற்றுலா விடுதிகளில் வேலை செய்பவர்கள் என்று சொன்னாலும், அது மிகப் பெரும்பாலும் விபச்சாரிகளே என்பது வெளிப்படை. சில வருடம் முன்பு வரை, வெளிநாட்டினரும் ஒரு […]