தடங்கலுக்கு வருந்துகிறோம்

This entry is part 31 of 31 in the series 4 நவம்பர் 2012

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம். வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.   வாசகர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், படைப்பாளிகளின் பங்கேற்புக்கும் எங்களின் நன்றி. திண்ணை ஆசிரியர் குழு

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

This entry is part 1 of 31 in the series 4 நவம்பர் 2012

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று சில தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு எதிரான கருத்துகளை மொழிபெயர்க்காதது ஒருதலைப்பட்சமானது என்று தெரிவித்திருந்தனர். இக்கட்டுரைத் தொகுப்பை மொழிபெயர்த்து முடித்தவுடன் அடுத்தடுத்த வாரங்களில் இக்கட்டுரைக்கு எதிரான வாதங்களையும் மொழிபெயர்ப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேள்விகளை எழுப்பவே விரும்புகிறேன். பதிலளிப்பது அவரவரது தனிப்பட்ட பார்வையையும், நோக்கங்களையும் பொறுத்தது. மதிப்பு மிக்க கருத்துகளைப் பதிந்த நண்பர்களுக்கு […]

விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி

This entry is part 9 of 31 in the series 4 நவம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா     தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அனைத்துக் கலைகளிலும், மனிதர்களையும் _ ஏன்? விலங்குகளையும் கூடத்தான் – கட்டிப்போட்டு மெய்ம் மறக்கச்செய்யும் இசைக்கலையே மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது.     அண்மையில் முடிவுற்ற விஜய் டி.வி. யும் ஏர்டெல் நிறுவனமும் இணைந்து நடத்திய இளநிலை இசைத் திறமையாளர்களுக்கான – Super singer among junior artistes – முதலிடம் உண்மையான இசை நுகர்வாளர்கள் செய்து வைத்திருந்த முடிவைத் தவறாக்கிப் பிறிதொரு போட்டியாளருக்குத் […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.

This entry is part 7 of 31 in the series 4 நவம்பர் 2012

    காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு […]

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

This entry is part 20 of 31 in the series 4 நவம்பர் 2012

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !

This entry is part 29 of 31 in the series 4 நவம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

ஒரு வைர‌ விழா !

This entry is part 30 of 31 in the series 4 நவம்பர் 2012

சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுப‌து ஆண்டுக‌ள்! ஆனாலும் சுடரேந்திய‌ கையில் “மெழுகுவ‌ர்த்தியே” மிச்ச‌ம். மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள் அசைபோடுகின்றார்க‌ள் கும்மிருட்டை தின‌ந்தோறும். ச‌ட்ட‌ச‌பைக்கு நினைவுத்தூண் பிர‌ம்மாண்ட‌ம். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் தான் காண‌வில்லை. அவ‌ர் தொட்டுக்க‌ட்டிய‌தால் தீட்டு ஆகிப்போன‌து என்று தீண்டாமை பேசுகின்றார். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் காலொடிய‌ விட்டு விட்டு தூண்க‌ள் நிறுத்துகின்றார். இந்த பொய்க்கால் குதிரைக்கும் கொண்டாடுவோம் வைர‌விழா. இது இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் காழ்ப்பு உண‌ர்ச்சிக்கு வைர‌விழா. ல‌ஞ்ச‌த்தால் அர‌சிய‌ல் க‌ற்ப‌ழிந்து போன‌த‌ற்கும் […]

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்

This entry is part 28 of 31 in the series 4 நவம்பர் 2012

அர.வெங்கடாசலம் ஐயா, நான் எழுதி வெளியிட்டு உள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் கடந்த 29.10.12 அன்று தினமணி நாளிதழில் வெளியாகி உள்ளது. அதனைக் கீழே தந்துள்ளேன். அதனைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். திருக்குறள்- புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை By அர.வெங்கடாசலம் First Published : 28 October 2012 11:20 PM IST திருக்குறள்- புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை – அர.வெங்கடாசலம்; பக். 570; […]

தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்

This entry is part 27 of 31 in the series 4 நவம்பர் 2012

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் மனதில் ஒலி எழுப்பும் பாடல் உன் காதில் கேட்கிறதா எனது விழிகளுக்கு உனது வருகையைச் சமிக்கை மூலம் அனுப்பும் போது ? பனித் துளி ஒன்றை மலர் மார்பி லிருந்து பரிதிக் கதிர்கள் உறிஞ்சிக் கொள்வது போல் என் ஆத்மாவின் கீதத்தையும் நீ ஈர்த்துக் கொள் வாயா ?   விலகிச் செல்லும் என் இதயம் வெளியே […]

வாழ நினைத்தால்… வீழலாம்…!

This entry is part 26 of 31 in the series 4 நவம்பர் 2012

  (இது ஓர் உண்மைச் சம்பவம்)   காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் டீக்கடையிலிருந்து “வாழ நினைத்தால் வாழலாம்…வழியா இல்லை பூமியில் ” என்ற பாட்டுக்  கேட்கிறது…இவனும் அந்தப் பாடலை  முணுமுணுத்தபடியே மகிழ்ச்சியோடு நடக்கிறான். மனதுக்குள் கண்டிப்பா “பாஸ் ஆயிடுவேன்…”என்றும் ஒருதரம் சொல்லிக் கொண்டான். பல்கலைக்கழகத்தின்  டீன் அலுவலகம் முன்பு என்றுமில்லாமல் ஏகப்பட்ட மாணவர்கள் கூட்டம். இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது செமெஸ்டர் […]