அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய ‘வியர்வையின் ஓவியம்’ இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று 01.11.2012 பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை, மருதானை, டவர் அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.சிறுகதை, கவிதை, பாடல், காவியம், புகைப்படம் ஆகிய பிரிவின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர்களுக்கு விருதுகளோடு, சான்றிதழ்களும், பரிசுகளும், ஏனையவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடையாரில் மிக நவீனமான் பங்களா அது. சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர்கள். உள்ளே இரு பக்கமும் பசுமையான புல்வெளி. ஒரு பக்கம் டென்னிஸ் கோர்ட், இன்னொரு பக்கம் ரோஜாத் தோட்டம். காம்பவுண்டு சுவர்களைச் சுற்றிலும் ஒட்டினாற்போல் வளர்ந்திருந்த அசோகமரங்கள். அணுவணுவாய் செல்வச் செழுப்பை எடுத்துக் காட்டிக்கொண்டு, பார்த்ததுமே பணக்காரர்களின் வீடு என்று எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்தச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக என்பது போல் வாசலில் […]
உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி kpenneswaran@gmail.com “சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்” “ச்சு… ச்சு… […]
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி = 60 நிமிடங்கள் 24 மணி =1440 நிமிடங்கள் இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் வாழ்ந்தால் ஏறத்தாழ 31 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் வருகின்றது இதில் எத்தனை நிமிடங்கள் பிறருக்கு உபயோகமாக நாம் வாழ்கின்றோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்கள் கணக்குக் கூட வேண்டாம். ஒரு நாள் மட்டும் […]
புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று என்னைக் கேட்டால் எப்படித்தான் நான் சொல்வது. எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும். யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை. புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் […]
(1) பொய்மை காண வேண்டி வரும் தயக்கம். கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை. எதிர் அறையின் பேச்சரவங்கள் என்னைத் தீண்டுகின்றன. அவன் அறைக்குள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன. அவனை நேருக்கு நேர் காணாது சென்று விடும் வேளையைத் தேர்ந்து கொண்டிருப்பேன். மெல்லக் கதவைத் திறப்பேன் பூனை போல் வெளியேற. ஓ! அவன் கதவை நான் திறந்தது போல் அவன் கதவை அவன் திறந்து […]
மரணம் ஒன்றே விடுதலை கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு ஓவியனுக்குத் தெரியாத சூட்சும உருவங்கள் பார்வையாளனுக்குப் புலப்படும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச் செல்லும் கடலுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை மேனி கறுப்பாகாமல் மேகமாய் வந்து மறைக்கிறேனென தேவதைக்கு தெரிய வருமா மூக்குத்தியின் ஜ்வலிப்பைக் கண்டு நட்சத்திரங்கள் வயிறெரியும் அவள் உள் வரை செல்லும் காற்று அவளின் முடிவை விசாரித்துச் சொல்லுமா பெருமழையின் சாரலில் அவள் நனைந்துவிடக்கூடாதென நான் குடை பிடிப்பேன் நான் நனைவதைப் பார்த்து குடை […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி – இன்று அவருக்கு சந்திராஷ்டமம். காலையில் டிவியில் இன்றைய ராசி பலன் நிகழ்ச்சியில் சொன்னதைக் கேட்டார். பூபாலனுக்கு எப்போதிருந்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்தது என்பது அவருக்கு ஞாபகமில்லை. ஆனால் அதன்படிதான் அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நடக்கிறது என்பதில் அவருக்கு ஆழமான நம்பிக்கை வந்து.விட்டது அதிலும் சந்திராஷ்டமம் என்றால் அவ்வளவுதான். அன்று வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சந்திராஷ்டமம் வந்து விடும். என்னதான் […]
முருகன்ங்க வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு டீச்சர் சொல்லிட்டாங்க கல்யாண ஆச்சுங்க ஒரே பையன் 4 படிக்காங்க இங்கிலிஷ் ல பேசுறாங்க எல்லா வேலையும் செய்வேன்க கூலின்னு போட்டுக்கோங்க திருநெல்வேலி வரைக்கும் தான் போயிருக்கேன் ரேசன் கார்டு இருக்குங்க அரிசி வாங்குவேன்ங்க பழையதுங்க இரவுக்கு நெல் சோறுங்க பலகாரம்ல்ல நல்ல நாள் பொழுதுல்ல தாங்க சட்டை கல்யாண காட்சிக்கு போனதாங்க, அழுக்கு […]