மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “உனக்கொரு பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிந்தால் உறுதியோடு நீ அதை தீர்வு செய்ய முனைந்திடு ! அதுவே வல்லமை படைத்தோர் செய்வது. முதியோர் ஆலோசனையைக் கேட்டுக் கொள் மேலும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! திருமணப் பேச்சு துவங்கும் முதல் விழி நோக்கோடு ! முதல் முத்த மோடு ! காதலன் காதலி இருவரின் முதல் நோக்கு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட இருந்த குறை அறிவாளி பேசி மகிழ்ந்து பெருமிதம் அடைவான் ! பிறகு விரைவில் தாறுமாறாய் ஒழுக்க மற்று உரக்க அலறுவான் ! பிரச்சனை இதுதான் தன்மான மற்ற ஒருவனுக்கு விரைவில் வருவ திப்படி மதுவால் ! குடிகாரனுக்குப் பரிவு உள்ளம் இருக்குமே ஆயின் அதனைக் காட்டுவான் குடித்த பிறகு ! ஒளிந்துள்ள சினமும் அகந்தை, […]
__ரமணி ஓர் இனிப்பைச் சுவைப்பது போல என்னைத் திட்டிக்கொண்டிருந்தான் என் உயர் அதிகாரி. என் இயலாமையின் மீது விளையாடிக்கொண்டிருந்தது அவன் மூர்க்கம். பதிலடி கொடுப்பதின் இழப்புச் சுமை வாழ்க்கையை நசுக்கிவிடும் என்பதாலேயே என் சுயம் நெடுஞ்சாலையில் நசுங்கிய தவளையைப்போலக் கால் பரப்பி உறைந்திருந்தது. எனக்கு என் மனைவி அவன் மனைவிக்கு அவன் என்ற தொடர்ச்சியில் அவனுக்கு நான் வன்மையின் வடிகாலாவது சரிதானென்று சமாதானம் கொண்டது மனம்.
Bala S ( tssbala) உன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய், அலைக்கழித்து ஏமாற்றுகிறாய் , பல ஊரில் பல உருவில், தள்ளிச் சென்றேன் துரத்தி பிடித்தாய், பிடிக்க முயன்றேன் உரு மாறிவிட்டாய் விளக்க முயன்றேன் வெறும் வார்த்தை என்றாய், அழகே !!! நான் சரணடைகிறேன், என்னை விட்டு விடு. கண்டேன், புரிந்து கொண்டேன்!!! விளக்க முயன்றேன் , ஓடிவிட்டாய் , உண்மையே !!! என் அறிவிற்கு உன் வேகம் கிடையாது, என்னை விட்டுவிடு.
ஓவியக் கவிஞர் என அறியப்படும் அமுதோன் என்கிற அமுதபாரதியை நான் சந்தித்த நாட்கள் இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் குடி கொண்டிருக்கின்றன. சிறகு இதழ் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் என் நெஞ்சில் விதைக்கப்பட்ட உடன் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு கவிஞர் வானவனின் “ மகரந்த தூள்கள் “ எனும் ஹைக்கூ கவிதை நூல். கலை மணிமுடி, வண்ணை சிவா, கல்வெட்டு சொர்ணபாரதி, செல்லம்மாள் கண்ணன், கவிஞர் நந்தா என இப்போது நான் சகஜமாகப் […]
நடைப்பாதைப் பயணத்தில் வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில் ஓய்ந்தமர்ந்தேன். கரண்டுக் கம்பங்களில் காக்கையும் மதகடி நீரில் கொக்கும் வயல் வரப்புக்களில் நாரையும் நெத்திலிகள் நெளிந்தோட குட்டிச் சோலையாய் விளைந்து கிடந்தது வாய்க்கால். தேன்சிட்டும் மைனாவும் ரெட்டை வால் குருவியும் குயிலோடு போட்டியிட்டு தட்டாரப்பூச்சிகளும் வண்ணாத்திப் பூச்சிகளுமாய் நிரம்பிக்கிடந்தது மாமரம். மஞ்சள் வெயில் குடித்து பச்சை இலையாய்த் துளிர்த்துக் கிடந்தது நிலம். நெடுஞ்சாலை அரக்கனாக ஒற்றை லாரி என்னைப் புகையடித்துக் கடந்து செல்ல அள்ளியணைத்த அனைத்தையும் அனாதையாய்ப் போட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினேன். […]
எங்கோ ஒரு சிறுமி மறைமுக பாலியல் துன்பியலில் பயந்து நடுங்கிக் கிடக்கிறாள். நெடுஞ்சாலை ஓர குத்துப் புதருக்குள் காதலனை சந்திக்க சென்றவளின் பிணம். மிதவாதியா அல்லவா பிரிக்கத் தெரியாமல் சூலுற்றவளுக்கு சிறையில் பிரசவம். காதுகள் மடக்கியும் கண்மூடி மூக்கைப் பிடித்தும் கலங்கும் நெஞ்சடக்கியும் முன்னேறுகிறீர்கள்.. உங்கள் பயணம் உங்களுக்கு.. உங்கள் சிகரம் உங்களுக்கு. எதையும் யாரையும் கண்டிக்கவோ கண்டனம் செய்யவோ துணிவதில்லை நீங்கள். உங்கள் குழந்தைகளை அணைத்தபடி மேலேறுகிறீர்கள். பத்திரமாய் சேர்ந்தது குறித்து மகிழ்கிறீர்கள். தகுதியுள்ளது தப்பிப் […]
காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட பதவி காரணமாய் எழுத்தாளர்களாக ஆக்கப்பட்டவர்களே அதிகம். புதுமைப்பித்தனின் மேதமையை வெகு சீக்கிரமே உணர்ந்து, விவாதத்திற்குள்ளான அவரது ‘சாபவிமோசனம்’ போன்ற கதைகளை வெளியிட்டு புதுமைப்பித்தன் வரலாற்றில் இடம் பெற்ற ‘கலைமகள்’ தான், பின்னாளில் கவைக்குதவாத, சில காவல்துறை அதிகாரிகளின் பிதற்றல்களை அவர்களது பதவிகாரணமாய் வெளியிட்டு சேறு பூசிக் கொண்டது. இன்றும் புதுமைப்பித்தன் பேசப்படுவதும் பதவி காரணமாய் […]
(கட்டுரை – 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம். தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy) இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா. […]
பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி. பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய […]