“முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை

This entry is part 15 of 15 in the series 23 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா   டாக்டர் ராஜதுரையின் சொந்த ஊர் புலொலி. அவருடைய தந்தை செல்லத்துரை அப்போத்திக்கரியாக இலங்கையில் தென் பகுதியிலும், வன்னியிலும் உள்ள ஊர்களில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் உள்ளவர். செல்லத்துரையருக்கு மூன்று மகன்கள், அதில் இராஜதுரை மூத்தவர். இராஜதுரையின் இரு தம்பிமார்களும் சிறுவயதிலேயே ஹார்ட அட்டாக்கால் இறந்ததினால் அவர்களின் பிள்ளைகளை கவனிக்கும் பொநுப்பு  இராஜதுரையின் தலையில் விழுந்தது.   செல்லத்துரையருக்குத் தன்னப்போல தன் மகன் இராஜதுரையும் படித்து வைத்தியத் துறையில் ஈடுபட […]

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்

This entry is part 1 of 15 in the series 23 அக்டோபர் 2016

அன்புடையீர்,   இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.   நன்றி. தமிழ் மலர் குழு

பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்

This entry is part 3 of 15 in the series 23 அக்டோபர் 2016

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திரைப்படமாக்கப்பட்ட நாவல்கள் என்கிற தலைப்பில் எந்தெந்த நாவல் / சிறுகதையெல்லாம் திரைப்படமாக்கப்பட்டதோ அவையும் விற்பனைக்கு உள்ளன. இவைகள் அன்றி, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய திரைப்படங்களின் டி.வி.டி க்களும், தேசிய திரைப்பட […]

திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்

This entry is part 5 of 15 in the series 23 அக்டோபர் 2016

முருகபூபதி அறுபது  ஆண்டுகாலமாக  அயற்சியின்றி  எழுதிவரும் இலங்கையின்   மூத்த  முற்போக்கு  படைப்பாளி நீர்வைபொன்னையன்                             இலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். இவ்வாறு  ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளி. இலங்கை  வடபுலத்தில்    […]

தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part 2 of 15 in the series 23 அக்டோபர் 2016

      1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்   இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம்.   இரண்டாயிரம் பேர் இருப்பரா?   மக்கள் போகிறார்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய்.   இனி அவன் முகத்தில் முழிக்கவே கூடாதென கண்ணில் நீர்நிரப்பி எவளேனும் படுத்திருக்கக் கூடும் மிடில் பர்த்தில்   உயிர்பிழைக்கும் […]

கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

This entry is part 4 of 15 in the series 23 அக்டோபர் 2016

    தாத்தாவுக்கின்று எண்பது வயது   ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து   இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி   அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற ஓய்வு புதிய நியமனம் சக்கர வண்டி   தாத்தாவின் பாதப் பென்சில் பதிந்த தடங்களை ரப்பர் வண்டி அழித்தழித்து உருள உருள்கிறது அங்கே தாத்தாவின் வாழ்க்கை   ஒரு நாள்   தாத்தாவுக்கும் பேரனுக்கும் […]

தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …

This entry is part 6 of 15 in the series 23 அக்டோபர் 2016

          அருமைநாதன் தன்னுடைய சோகக் கதையைக் கூறலானான்.           காவலர்கள் கண்காணிப்பில் அவன் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டான். அவனுடைய கடப்பிதழைப் பயன்படுத்தி மீண்டும் அவனால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. காரைக்குடிக்கும் குன்றக்குடிக்கும் நடுவில் உள்ள பாதரக்குடி என்னும் கிராமம் அவனுடைய பூர்வீகம். அங்கு உறவினர்களுடன் தங்கவேண்டிய நிலை உண்டானது. ஒரு வருடத்தில் அவனுடைய அத்தை மகளை திருமணம் செய்து வைத்தனர். அதன்மூலம் அவனுடைய சிங்கப்பூர் திரும்பும் கனவு முற்று பெற்றது. ஒரு மகளும் ஒரு கைக்குழந்தை மகனும் உள்ளனர். […]

வெளிச்சளிச்சம்

This entry is part 7 of 15 in the series 23 அக்டோபர் 2016

நந்தாகுமாரன் வெளிச்சளிச்சம் (lighght)   அரம் சரோயன் (Aram Saroyan) என்ற அமெரிக்க கவிஞரின் மேற்படி கவிதை (ஆமாம் இது கவிதை தான் … எந்த எழுத்துப் பிழையும் இல்லை … நம்புங்கள்) 1965-இல் அமெரிக்க இலக்கிய திரட்டு (The American Literary Anthology) எனும் நூலில் வெளியானதும், காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சிகள் ஒன்றாகப் பூசல் பூத்தனர். காரணம் அதற்கு 750 டாலர்கள் சரோயனுக்குக் கொடுக்கப்பட்டது (இக்கவிதை முதலில் வெளியான சிக்காகோ ரெவ்யூ 250 டாலர்களை […]

சோப்பு

This entry is part 8 of 15 in the series 23 அக்டோபர் 2016

  ஸ்ரீராம் அந்த கடைக்குள் வெண்ணிலா நுழைந்தபோது அது அத்தனை சிறிய கடையாக இருக்குமென்றோ, அதிலும் ஓர் நகைக்கடையாக இருக்குமென்றோ அவள் நினைத்திருக்கவே இல்லை. வீட்டு வேலை என்று தான் அழைக்கப்பட்டிருந்தாள். அதுதான் அவளுக்கும் வழக்கம். வெண்ணிலா புரியாமல் பார்க்க, தினக் லால் பேசினார்.. ” நம்பள்கி கடை இது.. ஜொல்ஸ் கொஞ்சம் இருக்குது.. அதை க்ளீன் பண்ணனும்.. ” என்றுவிட்டு உள்ளே திரும்பி அகலம் குறைவான ஓர் கதவை காட்டினார். வெண்ணிலா கதவு திறந்தாள். சின்ன […]

கவிதைகள்

This entry is part 9 of 15 in the series 23 அக்டோபர் 2016

விழிப்பு – கவிதை நம்மை சுற்றிலும் வசந்தங்கள் தாம்… ஆயினும், நமது தடித்த தோல்கள்தாம் நம்மை சலனப்படுத்த‌ வசந்தங்களை அனுமதிப்பதில்லை… – ஸ்ரீராம் ************************************** கறை – கவிதை நெருப்பு… மரக்கட்டையை எரித்த கதையை சுவற்றின் மீதே எழுதிச்செல்கிறது… – ஸ்ரீராம் ************************************** தன்னியல்பு – கவிதை நான் நேராக வந்த பாதையை யாரோ குனிந்தபடியே கடந்திருக்கிறார்கள்.. யாரோ ஓடி கடந்த பாதையை நான் தவழ்ந்து கடந்திருக்கிறேன்… அந்த யாரோவுக்கு என்னையும் என்னை அந்த யாரோவுக்கும் தெரியாத […]