பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 44 in the series 30 அக்டோபர் 2011

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது ஒரு வகை. பரவலாய் காணக்கிடைப்பதுதான். ஒரு கேள்வியை இடைமறித்து கச்சிதமாய் தவறான விடையளிக்கும் பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம். தம்மைக் கதிரோனாய் காவ்யாசானாய் கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய் இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும். விழிப்போடிருக்கவேண்டும். 2 உன்னுடைய […]

கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்

This entry is part 3 of 44 in the series 30 அக்டோபர் 2011

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில் நடந்தப்பட்டது. அக்;டோபர் 27 முதல் 31 வரை நடத்தப்படுகிறது. 29 சனிக்கிழமையன்று பக்தர்களின் வேண்டுகோள்ளின்படி விசேட பூஜை 5 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற விழைந்தனர். சிறியவர் பெரியவர் முருகனின் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, முதலில் முருகன் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. வந்திருந்திருந்த அனைவரும் சிலைக்கு பாலைப் பொழிந்து […]

படிமங்கள்

This entry is part 2 of 44 in the series 30 அக்டோபர் 2011

என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும் நாளும் நடைபெறுகின்ற இயல்பாகிறது . புதிய படிமங்கள் தோன்றுவதில் பழையனவை ஆதங்கம் கொள்கின்றன தான் இன்னும் கீழே செல்கிறோம் என்று அவை இன்னும் தொன்மையாகிறது என்பதை அறியாமை உடையவானகிறது . நிறங்களின் தன்மையை மேலும் […]

நினைவின் நதிக்கரையில் – 2

This entry is part 1 of 44 in the series 30 அக்டோபர் 2011

தீபாவளி எல்லா நாளும் போல மற்றுமொரு நாளே என்று ஆகி வெகு வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும், தீபாவளிக்கான சிறுவயது குதூகளிப்பை,கொண்டாட்டத்தை, திரும்பவும் பெற்று விட எங்கோ ஒரு மூலையில் மனம் ஏங்கி கொண்டு தான் இருக்கிறது. திரும்பி செல்லவே முடியாத பாதை எப்போதும் வசீகரமானதே. சிறுவயதில் தீபாவளிக்கான உற்சாகம், ஊரில் முதல் பட்டாசு கடையாக திறக்கப்படும், சூர்யா வெடிக் கடை(கடல்), திறந்த நாள் முதல் தொற்றிக்கொள்ளும். வருடம் முழுவதும், பட்டாசு விற்கும் ராமையா […]