இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என் மனத்திற்கு மிகவும் நிறைவு தருகிற விஷயங்களாகவே எப்போதும் உணர்கிறேன். . ஒரு கவிதையை வாசகன் அணுகும் போது அவனுள் இருக்கும் ரசனை, மனோபாவம்,கருத்தியல், கோட்பாடு என பல காரணிகளும் பங்கு பெறுகின்றன என்பதை […]
அருணா சுப்ரமணியன் கண்ணாடி தொட்டி மீன்கள் கடலுக்குள் விடப்பட்டன.. கடலின் நீள ஆழம் கற்று சுறாக்கள் வாயில் சிக்காமல் திமிங்கலங்கள் தின்று விடாமல் தன்னைத் தானே காத்து நிமிர்வுடன் நீந்த தொடங்கின… கடல் வாழ் மீன்கள் தங்களுக்கான தண்ணீரை தேவையற்று தருவதாய் புலம்பத் தொடங்குகின்றன.. கடலில் வசிக்க ஆற்றலை வளர்த்து வெற்றி கண்ட மீன்கள் மீண்டும் கண்ணாடி தொட்டிக்குள் அடைய மறுக்கின்றன… இவ்வாறாய் ஒரு சூழல் சுழல்காற்றாய் சூறையாடுகிறது அமைதியான ஆழியை… – அருணா சுப்ரமணியன் (arunakalamani@gmail.com)
ஸ்ரீராம் சாமி சுத்தம் – கவிதை கற்கள் மீதும், சுள்ளிகள் மீதும் கால் வைத்து நடந்து கோயிலுக்கு செல்லும் வழியே தோளில் அமர்ந்திருந்த ஜானவிக்குட்டிக்கு சாரதி ஆகியிருந்தேன்… ஜானவிக்குட்டி கேட்கிறாள் ‘ஐய.. மாமா.. இந்த சாமி சுத்தமே இல்ல’… – ஸ்ரீராம் ********************************* இடம் – கவிதை மழை என நினைத்து பனியை அள்ளி அள்ளி பொழிந்துவிடும் தேசத்தில், மார்புக்கச்சையையும், குறி மறைக்குமோர் துணியையும் மட்டுமே அணிந்த பெண்ணொருத்தி என்னைப்பார்த்து விகல்பமின்றி புன்னகைக்கிறாள்… காமத்தின் இடத்தில் […]
சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும் நேரின்றி கோணங்களில் மட்டும். சிப்பாய் முதல் நகர்தலில் இருகட்டமும் பின் ஒன்றாய். யானையின் நகர்தல் நேர்த்திசை மட்டும்.குதிரை தான் தாவுதலோடு ,’ட; வடிவில் சட்டெனப் பெயறும்.எல்லா நகர்தலும் எதிர்வண்ணக் காய்களை வெட்டுவதையும் உட்படுத்தியது தான்.வெட்டுவது […]
ஸ்ரீராம் கட்டுப்பாடின்றி பயணிக்கும் ரயில். அதில் ஒரு காதல். ஒரு அரசியல்வாதி. எழு நூற்று சொச்சம் பயணிகள். கடைசியில் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? ரயில் என்னானது? காதல் என்னானது என்பதுதான் கதை. கடைசி நாள் டூட்டி பார்க்கும் சின்சியர் டிரைவர். அவருக்கு உதவியாக சின்சியாரிட்டி துளியும் இல்லாமல் குடித்துவிட்டு வண்டியில் ஏறும் உதவியாளர். இதை ஒரு குறியீடாக பார்க்கலாம். பொறுப்பான அப்பா, பொறுப்பில்லாத மகன் அல்லது பொறுப்பில்லாத அப்பாவுக்கு பிறக்கும் பொறுப்பான புத்திசாலி மகன். இப்படி. பொறுப்பான அப்பா […]
இலக்கியா தேன்மொழி குளம் ஒன்றில் மிதக்கும் கிளை நீங்கிய இலை போலவே நாம்… எறும்புகள் நம்மை தேடுவது குளத்தை கடக்கவென தான் என்பதே அறியாதவர்களாய் நாம்… எறும்புகளுக்கு நாம் வெறும் மிதவைகள் தான் என்பதை ஜீரணிக்க முடியாதவர்களாய் நாம்… ஒரு மிதவை தனக்கே தனக்கென ஓர் எறும்பை கேட்பது எத்தனை பைத்தியக்காரத்தனமோ அத்தனை பைத்தியக்காரத்தனமானது ஓர் எறும்பு ஓர் மிதவையிடம் ‘எனக்கென பிறந்தவள் நீ ஒருத்திதான்’ என்பதுவும்… – இலக்கியா தேன்மொழி
” களவாடப்பட்ட குழந்தைப் பருவம் “ : நூல் வெளியீடு : சேவ் இயக்குனர் ஆ.அலோசியஸ் ( சேவ் கூட்டமைப்பு , திருப்பூர்) தலைமை வகித்தார். வியாகுலமேரி வரவேற்றார் . சா.கந்தசாமி ( சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் ) ,சென்னை நூலை வெளியிட்டார். அவர் பேசியது: குழந்தைப் பருவத்தை வேட்டையாடாதீர்கள் பெற்றோர்களே. அவர்கள் அந்தந்த வயதில் குழந்தைகளாகவே இருக்கட்டும்.உங்கள் வீட்டில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வாங்க, நீங்கள் வாகனம் வாங்க உங்கள் […]
பியெர் ரொபெர் லெக்ளெர்க் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா நூரம்பரக் – இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும் உருவாகி நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது. அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம் கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் […]
ஸ்ரீராம் எந்த் அடிப்படையும் இல்லாத, நிற வேற்றுமையை மிக அதிக அளவில் பாராட்டுகிற, எவ்வித புரிதலுமற்ற, மிகவும் தட்டையான மலினமான காதலையே சொல்ல வருகிறது சிவாவின் ரெமோ. ஒரு கேள்வி. ஒரு தெருவில் 10 பெண்கள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். கீர்த்தி போல் வெள்ளையாய், அழகாய் ஒரே ஒரு பெண். ஏனைய 9 பேரும் மாநிறத்தில் இருக்கிறார்கள் எனக்கொள்வோம். அதே தெருவில் இருக்கும் 10 ஆண்களும் கீர்த்தி என்கிற ஒரு பெண்ணின் மேலேயே மெரிசலானால், ஏனைய 9 […]