கங்காதரன் சுப்ரமணியம் நான் அந்த பெண்மணியை முதன்முதலாக சந்தித்தது எங்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு எதிரே இருந்த காய்கறிக்கடையில் தான். அடுத்த சில நாட்களுக்கு வேண்டிய காய்கறிகள், பழங்களை வாங்கிய பின், மொபைல் ஃபோனை எடுக்க ஜோல்னா பைக்குள் கையை விட்டு துழாவிய போதுதான், வீட்டிலேயே மறந்து வைத்து வந்தது தெரிந்தது. கூகுள்பே, பேடீயெம் என்று வசதிகள் வந்தபின், பர்ஸை எடுத்துக் கொண்டு வரும் பழக்கம் அறவே போய்விட்டது. சில்லறைக்கு அலைய வேண்டியதில்லை, பாருங்கள். என்னுடைய நிலமையைப் புரிந்து கொண்ட […]
குரு அரவிந்தன் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் […]
கோ. மன்றவாணன் திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் : கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன் சொல்லாது இருக்கப் பெறின். கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான். கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள். ஒருவர் படிக்கவில்லை என்றால்… கற்கவில்லை […]
ரவி அல்லது கொளுந்துவிட்டுஎரியும்அடுப்பில்வெந்துகொண்டிருந்ததுபசி. குளிர்ந்த நீர்வயிற்றுக்குள்சூடாகியதற்குபெரும் காரணம்தேவையில்லைஅடுப்புஎரிவதைத் தவிர. புத்தகத்தில்சுருண்டுக்கிடந்தபிள்ளைமதியம் மண்ணில் விழுந்தசாதத்தைசாப்பிட்டிருக்க வேண்டுமெனநினைத்தவாறுஒழுகும்எச்சிலால்காகிதத்தை நனைத்து.வருவது தூக்கமாமயக்கமாவெனதெரியாமலையேகிடந்தது. தட்டியை விளக்கிவெளிவந்தஅம்மாகுப்புறக் கிடக்கும்கணவனைத் தெரியதவாறுகதவுத் தட்டியை மூடிபிள்ளையைஎழுப்ப வேண்டுமென்றபெருங் கவலையோடுஅவசரமாகஅடுப்படிக்குப் போனாள். சோறாகாமல்கூழான கஞ்சிக்குவருத்தப்படும்அம்மா.வாஞ்சையோடுஅணைத்துமுத்தம் கொடுக்கும்போதுஇன்றும்சாராய வாடைவராமலிருந்தால்தேவலாமெனகனவு கண்டதுபிள்ளைகுமட்டும் கொடுமையிலிருந்துதப்பிக்க.வடிக்காத கஞ்சிவாடையைமுகர்ந்தவாறு. -ரவி அல்லது.ravialladhu@gmail.com