ஆ. கிருஷ்ண குமார். இது படைப்புக் களம். இந்த ஒரு புத்தகத்தின் விமர்சனக் கட்டுரைக்காக படைப்புகளம் என்ற பதத்தை பயன்படுத்துவது சரியாகுமா? என்று கேட்டால் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அன்பின் ஐந்திணை சில கட்டுரைகள் உள்ளடக்கிய ஒரு புத்தகம். கட்டுரை என்று சொல்ல வரும்போது பொது நடப்பைப் பற்றியோ சினிமா குறித்த கட்டுரைகளோ அல்ல. தன் சொந்த வாழ்வனுபவங்களை க.மோ. கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறார். அதனால், இந்த நூலிலிருந்து குறிப்பாக சில கட்டுரையின் பெயரைஎடுத்து குறிப்பிட்டு […]
டாக்டர் ஜி. ஜான்சன் அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால் அன்றாடம் படகுகளில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். வேறு அகதிகள் முகாம்கள் இராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு தங்க இடமும், உணவும் , சில அடிப்படை வசதிகளும் தமிழக அரசு செய்து தந்தது. […]
டாக்டர் ஜி. ஜான்சன் இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus )என்று அழைக்கிறோம். அவை போலியோ வைரஸ் ரகம் 1 ,2 , 3 என்று மூன்று ரகங்கள் உள்ளன இந்த வைரஸ் வகைகள் குறிப்பாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் தன்மை மிக்கவை. முதுகுத் […]
ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி எதுக்கும் நான் இப்பவே பாலு வாத்யாருக்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிடறேன். அவர் சொல்ற மாதிரி ப்ளான் பண்ணியே டிக்கெட்ஸ் புக் பண்ணிக்கலாம்…என்றவள் கைபேசியில் அவரை அழைத்துப் பேசி விஷயங்களைக் கேட்டுக் கொண்டவள்….. அம்மா….டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சு….ஈஸியா கிடைச்சுடுத்து. இங்கேர்ந்து நேரா டெல்லி….ஏர்போர்ட்ல கனெக்டிங் ப்ளைட் டு வாரணாசி. மூணு நாட்கள் காசில தங்கறோம். நடுப்பற அலகாபாத்துல திரிவேணி சங்கம் ,கயா, எல்லாம் லோக்கல் கார் வெச்சுக்கலாமாம் , அப்பிடியே […]
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் இத்துடன் ஜெயந்தன் விருது அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தமிழ்மணவாளன் Invitation
.. .. .. ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும். காப்பியைக் குடித்துக்கொண்டே அவன் தன் அலமாரியைப் பார்த்தான். அதன் சாவி அதிலேயே செருகி யிருந்ததைக் கவனித்தான். அவன் பார்வை போன திக்கைக் கண்டதும் தயாவுக்குத் திக்கென்றது. கவனமாக அலமாரிப் பக்கம் பார்க்காமல் அவள் காலித் தம்ப்ளரைத் திருப்பி எடுத்துச் செல்லுவதற்காகக் காத்திருந்தாள். […]