வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.30.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: மாதவன் திடீரென மறைந்ததும் கோபியர் கண்ணனைக் காணாமல் களிற்றைத் தொலைத்த காதல் மடப்பிடிகள் போல் தவியாய் தவித்து நின்றனரே! [ஶ்ரீம.பா.10.30.2] திருமகள்கேள்வனின் பீடுநடை, காதல் ததும்புமின் முறுவல், சுழன்று வீசும் கடைக்கண்ணாடல், உள்ளங்கவர் உவகைமிகு சொல்லாடல் முதலிய திருவிளையாடல்களால் தங்களையே பறிகொடுத்து, மனதால் அவனையே வரித்து, அவனாகவே மாறி, அவனது லீலைகளை அப்படியே நடித்தும் ஆடியும் பாடியும் ஆனந்தித்தனர் கோபியரே! [ஶ்ரீம.பா.10.30.3] தமதன்பனாம் அச்சுதனின் நடையுடை பாவனை, புன்னகை, […]
ஜெயானந்தன் மரத்தின் மடியில் படுத்துக்கிடந்தேன். முகத்தை மூடிய புத்தகம் கனவால் அலைந்த மனசு. சூரியனோடு இலைகள் கொண்ட ஸ்பரிச ஆலோபனைகளின் சங்கீதம் காது மடல்களில் பட்டு உலக மனிதர்களோடு உறவுக்கொள்ள அழைக்கின்றது. விரைந்தோடும் மனிதக்கூட்டம் வணிகப் பாடல்களில் செத்து முடிகின்றது. நடந்து சென்ற தாகூர்தான் என்னை அணைக்க ஓடிவந்தார். அவர் உடல் முழுக்க கவிதை தோட்டம். உள்ளத்திலோ ரவீந்திர சங்கீதம். “நளந்தா அழிந்து விட்டதா” எனக்கேட்டு அழுதார். சாந்தி நிகேதன் கதி என்னவோ எனக்கு தெரியாது. நான் […]
குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. பாட்டும் தொகையுமான சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் மலைபடுகடாம் இரண்டாவது பெரிய நூல். 583 அடிகளால் ஆனது. பாட்டுடைத் தலைவன் நன்னன் வேண்மாள். பாடியவர் இரண்ய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். திணை பாடாண் ,துறை ஆற்றுப்படை.. ஆசிரியப்பாவால் ஆனது . தன் வறுமை தீர வள்ளல் ஒருவனை நாடிப் பாடிப் பரிசில் பெற்று வரும் கூத்தர் , தன் எதிர்ப்படும் இரவலனை அந்த வள்ளலிடம் செல்ல விடுப்பது ஆற்றுப்படை என்பதாகும். அவ்வகையில். தன் வறுமை […]
ரவி அல்லது யாவும் கடந்துஆசுவாசத்திற்குள்தள்ளபட்ட பாடுகளின்விசும்பலில்அம்மாவிற்குஇன்னும்கொஞ்சம்இந்த வாழ்வுகருணை காட்டி இருக்கலாம்பழஞ்சேலையின் கிழிசல்களைதைக்கும்நிலைதாண்டும் பொழுதினில்அழைக்காமல். -ரவி அல்லது.
கங்காதரன் சுப்ரமணியம் கண்ணுசாமி, குமார், சீனு, ராமானுஜம், முரளி இவர்கள் அனைவரும் பள்ளியில் ஆறாம் கிளாஸ்ஸிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். இதில் கண்ணுசாமி இன்று குடும்ப பிஸினஸை நடத்தி வருகிறார். மற்றவர்கள் தனியார் கம்பெனி, பேங்க் என்று வெவ்வேறு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள்; பேரன், பேத்திகளை எடுத்து வாழ்கையில் தங்களுடைய கடமைகளை முடித்து விட்டவர்கள். இதில் கண்ணுசாமியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிளாஸில் கடைசி பெஞ்ச்சில் தான் உட்காருவார். தான் ஒருவரையும் […]
ரவி அல்லது சகதியின்சேறு வாடையில்அய்யாவின்கால் தடங்களில்மூழ்கிய மனம்உழுவதற்குவிலா கோலியது. முற்புதர்கள் மண்டிமுகடுகளாகவானம் பார்த்ததரிசு நிலத்தில்நின்றாடும்தண்ணீரின்நித்தியங்கள்யாவும்அய்யாவின்இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில்நின்ற நீர்ஒப்படியாகவேஅமைந்துநெகிழ்வில்நாற்றுகளைப் பற்றஇஞ்சாமல்தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில்வாரங்களைக் கடந்துவாழ்க்கையே சகதியாகதோல் இறுக்கிஇன்று போலல்லாமல்தாளடி நடவுசாகுபடிகள்தாங்கொணாதுயரங்கள்தந்தது. அந்தி சாயும்நேரத்திற்குள்வயல்கள்யாவும்பச்சையாடை போர்த்தியபாங்கில்கழித்துச் செதுக்கியவரப்புகளில்நடக்கும் பொழுதுஉள்ளம் மகிழ்வில்உருமாறி திளைத்தது. புல்லொன்றில்கிடந்தசோற்றுப் பருக்கையைபொறுக்கி எடுத்துவிழுங்கிய பொழுதின்வியாபித்த பதறலில் எனக்குள் ஒலித்த‘ஒற்றைப் பருக்கையிலும்உழவனின்உயிர் இருக்கிறது’என்றஅய்யாவின் குரல்அறுவடைகள் செய்ய முடியாதநெற்பயிராகநெஞ்சுக்குள்நெடு நாட்கள்கடந்த பொழுதும்வாழிப்பாகவளர்கிறது. -ரவி அல்லது.பிகு:கண்டு முதல்: லாபம்.விலா கோலுதல்:ஏர் ஓட்டும் பொழுது சிறிய சிறிய […]