அறுவடைக்கு ஆட்படாத அய்யாவின் கண்டுமுதல்

This entry is part 4 of 4 in the series 29 செப்டம்பர் 2024

ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற நீர் ஒப்படியாகவே அமைந்து நெகிழ்வில் நாற்றுகளைப் பற்ற இஞ்சாமல் தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில் வாரங்களைக் கடந்து வாழ்க்கையே சகதியாக தோல் இறுக்கி இன்று போலல்லாமல் தாளடி நடவு சாகுபடிகள் தாங்கொணா துயரங்கள் […]

கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு.

This entry is part 3 of 4 in the series 29 செப்டம்பர் 2024

குரு அரவிந்தன் கனடா, தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு, இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்திய ‘முதலாம் உலகத் தொல்காப்;பிய ஆராய்ச்சி மாநாடு’ கனடாவில் உள்ள ரொறன்ரோவில் 2024 செப்ரெம்பர் மாதம் 20, 21, 22 ஆகிய தினங்களில் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இறுதிநாள் நிகழ்வு கனடா தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் நடைபெற்றபோது, பிரதம விருந்தினராக மாண்புமிகு திரு. சித்தார்த் நாத் கனடா இந்தியத்தூதரகத் தலைமைத்தூதர் கலந்து உரையாற்றிச் சிறப்பித்தார். […]

ஆய்ச்சியர் குரவை – பாகம் நான்கு

This entry is part 2 of 4 in the series 29 செப்டம்பர் 2024

வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும்,  மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப் புன்னகை மிளிர மன்மதன் மயங்கும் மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன் அவர்கள் முன்னே தோன்றினாரே! [ஶ்ரீம.பா.10.32.3] பிரிந்த உயிர் திரும்பி வர மிக உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல் அருளால் ஆருயிர் […]

தெறிப்பு

This entry is part 1 of 4 in the series 29 செப்டம்பர் 2024

பென்னேசன் வெய்யில் கொள்ளை போயிக்கிட்டு இருக்கு?  எதுக்குக் கிளம்பறே?  சித்தப்பாவைப் பார்த்துட்டே போகலாமேடா.  நான் சொல்றதை விட நீ இருந்து அவர்கிட்டே சொல்லிட்டுப் போனா அவருக்கும் ஒரு சமாதானமா இருக்கும் இல்லை.  வர்ற நேரம்தான்.  பார்த்துட்டே போயிடேன்’ என்று அவனை நிறுத்திப் பார்த்தாள் கல்பனா சித்தி.  வரதனுக்கு அங்கிருந்து தப்பித்துப் போனால் போதும் என்று இருந்தது.  தான் வந்தபோது சித்தப்பா இல்லாமல் போனதே நல்லது.  இருந்திருந்தால் முதல் காரியமாக அவனுடைய அழைப்பையே படுகேவலமாக உதாசீனப்படுத்தி இருப்பார்.  “அன்னிக்கு […]