எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22

 

ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூளை வானை விட அகண்டது – 21

மூளை வானை விட அகண்டது

அருகே வைத்து  விட்டால் அவை

ஒன்றை ஒன்று  விழுங்கி விடும்.

அண்டையில்  நீ சும்மா நின்றால் 

மூளை கடலை விட ஆழமானது.

வானுக்கும் ஆழிக்கும் இடையே

மானிட மூளையை வைத்தால்

ஒன்றை ஒன்று உறிஞ்சி விடும் 

வாளி நீரைப் பஞ்சு போல்.

மனித மூளை கடவுள் அளவு 

எடைக்கு எடை  பளு பார்த்தால் 

சொல்லுக்கும் உச்சரிப்புக்கும்

உள்ள வேறுபா டாய் இருக்கும்.

Series Navigationஅணு ஆயுத யுகத்துக்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -5ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு