ஒரு கதை கவிதையாக

கம்பிக் கூண்டில்

காதல் பறவைகள்

ஆடிப் பாடிய காதல்

அடிமைக் காதலானது

அடைத்துப் போட்டவன்

அயல்நாட்டில் இருந்துவிட்டு

அறுபது நாள் தாண்டி வந்தான்

ஜோடிஜோடியாய்க் குருவிகள்

செத்துப் போயின

சாவின் வாசலில் துடித்த ஒரு

கருஞ்சிவப்புக் குருவி

கடவுளைக் கேட்டது

‘நீதியின் அரசனே

கொல்லப்பட்ட எம்

குலத்திற்கு என்ன நீதி?

கொன்றவனுக்கு

என்ன நீதி?

‘வாயில்லா உங்களை

வாய்மை ஏதுமின்றி

வன்கொலை செய்தோரை

வைரஸ் கொல்லும்’

‘கடவுள் சொன்ன

கணக்குச் சரிதான்’

என்ற கருஞ்சிவப்புக்

குருவியின் கணக்கும்

முடிந்தது.

Series Navigationசமகாலங்கள்“வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளது.