ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்

 

 

மழைக்கால பூச்சிகள்

விளையாடும் மரத்தடி

தெருவிளக்கு….

அதன் கீழ் பசியோடு

நிற்கும் கரப்பான் பூச்சி

ஆட்டம் முடிய காத்திருக்கிறது… கொஞ்சம்

கலைத்து விழுபவனை

வேட்டையாட பார்த்து நிற்கிறது

 

வீசும் ஒளியில் பேச்சு சத்தம்…

ஊட்டியில் சேற

போட்டி போடுதே….

 

ஆர்வக்காட்டில் கரப்பானின்

கற்பனை

சுருண்டு விழுந்தவனை

விழுங்க ஓடி புரண்டு விழுந்ததில்

தரையோ தெரியவில்லை

 

தடவி பார்க்குது கால்களால்

அகப்படாது பூமியே

நீந்தி நீந்தி கலைத்தால்

உறக்கம் வருகிறது…

 

மயக்கநிலையில் இறந்துப்

போனதாய் நினைவு

மனதிலே…

 

தொப்பென விழுந்த பூச்சி

     திடுக்கென எழுந்த கரப்பான்‌

பிடிக்குது ஓட்டம், கிடைத்தது மூச்சென

    கிடைத்த உணவை பிழைக்க விட்டு

தெறிச்சு ஓட்டம்

இறக்கம் ஒன்றுமில்லை…

எல்லாம் பதட்டமே…

 

  

 

Series Navigationஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்