கண்ணாடி

 

அருணா சுப்ரமணியன் 


தெரியாமலோ 

புரியாமலோ 

ஆத்திரத்தாலோ 

ஆளுமையாலோ

நமக்குள்  உடைந்த 

கண்ணாடியை நீ 

ஓட்ட வைத்து நீட்டி 

அழகு முகம் பார்

என்றாலும் 

என் கண்களுக்கு 

தெரிவது என்னவோ 

அதன் விரிசல்களும் 

என் வடுக்களும் தான் …….


Series Navigationகதை சொல்லிஇனிப்புகள்…..