கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)

This entry is part 23 of 45 in the series 2 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தோன்றியது முதல் இங்கிருக்கிறேன்
முடிவு வரை நானி ருப்பேன்
முடிவில்லை எனது வசிப்புக்கு !
படைப்பின் போது
இறைவன் தன்னிட மிருந்து
பிரித்து வைத்து
ஒரு பகுதி எரிப்புத்
தீப்பந்தம்
இந்த மனித ஆத்மா !

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

காதல் என்பது என்ன ?

இதயத்தை ஊட்டும் அமுதமாய்
காதலர் கண்களின் வழியே
ஆன்மா வின் மதுவில்
காதல் வளர்ந்து வருவது !

காதல் ஒரு ரோஜா !
புலரும் போது திறக்கும்
அதன் இதயம் !
பெண் முலை மீது
பதிக்கும்
புதிய கன்னி முத்தங்கள்
புத்துயிர் மலர்ச்சி அளிக்கும் !

காதல் ஓர் மாளிகை !
அதிர்ஷ்டக்
களஞ்சிய மானது !
இன்பத்தின் மூலக் காரணி !
சாந்திக்கும்
இதய அமைதிக்கும்
ஆரம்பப் பீடம் !

காதல் அழகுத்துவ இதழ்கள்
மீது விழுந்திடும்
மெல்லிய புன்னகை !
காதலை வாலிபன்
கையாளும் போது தன்
கடமைப் பணி மறப்பதால்
மெய்யான
சுவைக் கனவாய்
வீணாகுது
வாழ்வு பூராவும் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 29, 2011)

Series Navigationமுற்றும்நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *