குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும்

நல்லவரை வல்லவரை

வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை

அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’

வீரபராக்கிரமசாலியாக

ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள்

ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர்.

கேட்டுக் கேட்டுத் தன்னை யதுவாகவே

நம்பத்தொடங்கிவிட்ட சித்திரக்குள்ளன்

வேகமாய் ஓடிவந்து முன்னவரின் விசுவரூபத்தை

முழங்காலில் முட்ட _

முணுக்கென்று கொசு கடித்ததாய் நினைத்து

அந்த மனிதரின் கை தட்டிவிட _

ரத்தம் சொட்டத் தொடங்கியது

சித்திரக்குள்ளன் மண்டையிலிருந்து.

சண்டையிட்டதில் உமக்குக் கிடைத்த விழுப்புண் அது

என்று பேர்பேராய்ச் சொன்னதில் _

வழியற்ற வழியில்

இல்லாத போர்க்களம் நோக்கி முண்டியடித்து (தோற்பதற்கென்றே) முன்னேறிக்கொண்டிருக்கிறான்

சின்னவன்.

Series Navigationகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்பொருள்பெயர்த்தல்