குற்றமற்றும் குறுகுறுக்கும்!

Spread the love

ரா.ஜெயச்சந்திரன்

 

ஒற்றைப் பார்வை போதும்;

குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க……!

 

“சந்தேகப் பொருளையோ,

நபரையோ பார்த்தால்

அதிகாரியை அணுகவும்……”

 

தொடர்வண்டி அறிவிப்பு

அணைந்த நொடி

ஒரு கூரிய பார்வை,

கையில் பண்ட பாத்திரங்களுடன்

இறங்கும் நிறுத்தம் தெரியாது

பேந்தப் பேந்த முழிக்கும்

ஓர் அயலக ஊழியரைத் தாக்க,

அக்குளிரிலும் அப்பாவி முகத்தில்

முத்துக்கள் துளிர்க்கின்றன!

பணிவன்புடன்,

ரா.ஜெயச்சந்திரன்,

Series Navigationபாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)மோடியின் தப்புக்கணக்கு –