சுயம் தொலைத்தலே சுகம்

 

ஆதியோகி

 
 
“வலி உணர்தலின் உச்சம்
சுயம் தொலைத்தல்”
-கிலியூட்டுகிறார்கள்.
 
“அடிமைப்படுதலின்
அவமான அடையாளம் அது”
-ஆவேசமாய் முழங்குகிறார்கள்.
 
எனது சுயமோ,
சுகமாய் கரைந்து கரைந்து
காணாமலே போய் விட்டது
உனது காதலில்…
 
நீயும் கூறுகிறாய்
அதையேதான்…
 
கொஞ்சம் கொஞ்சமாய்
உனதையும் எனதையும்
காதலில் கரைத்துக் கரைத்து
இதமாய் நமதாகிப் போவதில்தான்
எத்தனை ஆனந்தம்…!?
                  ‌‌ ‌.      – ஆதியோகி
Series Navigationஇது காதல் கதை அல்ல!அணு ஆயுத யுகத்துக்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -5