சொர்க்கம்

Spread the love

சேலம் எஸ். சிவகுமார்
sivakumar
அழகாய் ஒரு வீடு
மெத்தெனப் புல் பாதை
இனிதாய் மலர்த்தோட்டம்

பூத்த சிறுமலர்
சேர்த்த நறுமணம்
நீர்மேகம் இல்லாத
நீலத் தொடுவானம்

தனியாய் இசைப் பாட்டு
சுவையாய் ஓர் அடிசல்
பாடும் பறவை
ஓடும் அணில்

காலைத் தென்றல்
கையேடு கை

சுடுபானம்
நான்
நீ
.

Series Navigationசிறந்த பழைய திரைப் பாடல்கள்பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு