தாழ் உயரங்களின் சிறகுகள்

Spread the love
இலக்கியா தேன்மொழி
சிட்டுக்குருவியின் சிறகு
உங்கள் கண்களை
உறுத்துகிறது…
அந்த சிறகின் வண்ணங்கள்
ஈர்க்கின்றன,
உங்களுடையதைவிடவும்…
அந்த சிறகு
உங்களின் சிறகுகளைக்காட்டிலும்
வசீகரமாக இருக்கிறது…
அந்த சிறகுகள்
தாழ பறந்து
உலகின் அழகியல்களை
உங்களைக்காட்டிலும் அதிகமாய் ரசிக்கின்றன……
அதனால்
அந்த சிறகுகளை பிய்த்துப்போட‌
நினைக்கிறீர்கள்…
ஆனால்
உங்களுக்கு புரியவில்லை…
தாழ் உயரங்களின் உலகிற்கான‌
உங்கள் சிறகுகள் தாம்
எங்களுடைய சிறகுகள் என்பது…
 –
Series Navigationமொழி…அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்