திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

SVN_0376

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு உயர்ந்த உள்ளம் மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வெளியீடு கண்டன. திண்ணை ஆசிரியர் திரு கோபால்ராஜாராம் அவர்களின் வாழ்த்துரையுடன் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் பல சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழிலும் வெளியானவை களாகும். நற்பணி, தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், கடையநல்லூர் முஸ்லிம் லீக் கவிமாலை, லிசாவின் பெண்கள் பிரிவு, மற்றும் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகிய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த விழாவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பரதன் மற்றும் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் இணை இயக்குநர் திரு வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்

டாக்டர் அப்துல்கலாம் பற்றிய காணொளியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து நம் முதல் பிரதமர் அமரர் லீ குவான் யூ மற்றும் டாக்டர் அப்துல்கலாம் ஆகியோரைப் பற்றிய இரண்டு கவிதைகள் மிக உருக்கமான இசையில் திரு பரசு கல்யாண் அவர்கள் பாடினார்கள். தொடர்ந்து கதைத் தொகுப்பை ஆங்கிலோசீன தன்னாட்சிப் பள்ளியின் தமிழ் மற்றும் மலாய் மொழித்துறைத் தலைவர் திரு முகமது சரீஃப் அவர்களும் கவிதைத் தொகுப்பை தென்கிழக்காசிய இலக்கிய விருது மற்றும் சென்ற ஆண்டின் கலாச்சார விருது ஆகிய சிறப்புக்கள் பெற்ற கவிஞர் க.து.மு. இக்பால் அவர்களும் அறிமுகம் செய்து வைத்தார்கள். தொடர்ந்து ஏற்புரை வழங்கிய யூசுப் ரஜித் சிண்டா இல்லாவிட்டால் நாம் அமாதைகளாகிவிடுவோர் என்றார்.நீண்டகாலமாக தனக்கு சிண்டாவுடன் இருக்கும் தொடர்பைச் சொல்லி தனக்குப் பிறகு தன் பிள்ளைகளும் அவர்களுக்கும் பிறகு தன் பேரப்பிள்ளைகளும் தன் சேவையைத் தொடர்வார்கள் என்று கூறியதுடன் தன் பேரக்குழந்தைகளை மேடையேற்றி நூல்களை அறிமுகம் செய்து வைத்தது புதுமையாக இருந்தது. முக்கிய அழைப்பாளர்களுக்கு நூல்களை வழங்கி திரு இரா தினகரன் தொடங்கிவைத்த நூல்விநியோகம் தொடர்ந்து திரு ரஜித் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சேர்ந்த நிதியை திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் எண்ணி மொத்தத் தொகையை மேடையில் அறிவித்தார். இறுதியாக திரு ரஜித் அவர்கள் திரு பரதனிடன் நிதியை ஒப்படைக்க திருமதி ஆசிகா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது

SVN_0201

புகைப்படம் நாதன் வீடியோ

 

 

 

 

Series Navigationஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3