தீட்சை

ரவிசந்திரன்

கவிதை கேட்டேன் காதல் தந்தாய்
காதல் கேட்டேன் காமம் தந்தாய்
கல்வி கேட்டேன் காசு தந்தாய்
காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய்
நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய்
வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய்
தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய்
மொழி கேட்டேன் பழி தந்தாய்
பாரசக்தி என் மொழியில் பிழை கண்டு எனக்கு மெளனம் தந்தாயோ ?
மெளன குருவின் காலடி கட்டை விரல் தீட்சை….

Series Navigation