நூலிழை

Spread the love

கவிதைக்கும்,பொய்க்கும்
உள்ள தூரம்

கனவுக்கும்,நனவுக்கும்
உள்ள தூரம்

நிழலுக்கும்,நிஜத்திற்கும்
உள்ள தூரம்

ஒப்பனைக்கும்,இயல்பிற்கும்
உள்ள தூரம்

அடங்கலுக்கும்,மீறலுக்கும்
உள்ள தூரம்

மனதிற்கும்,நினைவிற்கும்
உள்ள தூரம்

சொல்லுக்கும்,பொருளுக்கும்
உள்ள தூரம்

விழிப்பிற்கும்,உறங்கற்கும்
உள்ள தூரம்

உனக்கும் எனக்கும் இடையே
உள்ள தூரம்….

சின்னப்பயல்
– chinnappayal@gmail.com

Series Navigationகூடு“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை