This entry is part 19 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெண்ணிற இரவுகளைக்
கைகளில் சேகரித்து
யாரும் கானவியலாதொரு
தேசம் நோக்கி ஓடினேன்..

யாருமற்ற அவ்வெளியில்
சாம்பல் மலர்களாலான மழை
பெய்து கொண்டிருக்க
தோளில் உருபெற்ற வலி
மெல்ல மெல்ல பயணித்து
விரல்கள் வழி இரவுகளை நனைக்க
சில்லிட்டது எனக்கு..

குளிர்ந்து விட்ட கைகளில்
நடுங்கிய இரவுகள்
மெல்ல உடல்பெருத்து
விடியல்களாய் பூப்பெய்து கொண்டிருந்தன..

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி -5பிறந்தநாள் பொம்மைகள்..:-