நெத்தியடிக் கவிதைகள்

 

 

பத்து

ஆண்டுகளாக

என்னால்

சாதிக்க

முடியாததை

ஒரு மூட்டைப்பூச்சி

சாதித்து விட்டது

 

என் கணவர்

புதுக் கட்டில்

வாங்கிவிட்டார்

 

*****

 

‘ஓவர் ஸ்டே’

இங்கு

பிரம்படிக் குற்றம்

ஓடிவிடுங்கள்

புகைமார்களே

*****

என்றோ கொடுத்த

பத்து வெள்ளியை

கொடுப்பார் என்று
நானிருக்க
மறந்திருப்பேன் என்று
அவர் இருக்க
இன்றுவரை
அந்தப் பத்து வெள்ளியை
அவர் தரவுமில்லை
நான் பெறவுமில்லை
அது

கடனா?
இனாமா?
பிச்சையா?
திருட்டா?

—————

தெரியாது

 

அம்மணம்

அவமானமென்று

குழந்தைக்குத்

தெரியாது

 

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவைதொடுவானம் – 92. பெண் தேடும் படலம்