பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

author
3
1 minute, 6 seconds Read
This entry is part 17 of 45 in the series 2 அக்டோபர் 2011

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள்
தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

அக்டோபர் 2, ஞாயிறு மாலை சரியாக 6.30 மணிக்கு.
ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர்
தொடர்புக்கு: ஞாநி 9444024947

Pareeksha Tamil Theatre group will perform Badal Sircar’s Thedungal( michil)
directed by Gnani on October 2, Sunday sharp at 6.30 pm at spaces,
1, Eliots beach road, Besant Nagar. Thedungal is about search for a
procession that will guide us to our real homes.
contact : gnani 9444024947

பரீக்‌ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன
நாடகக்குழு. விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர்,
பிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ்
எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன்,
பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி,
ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு
வழங்கி வந்துள்ளது.

பாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில்
மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித
விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல்
சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும்
நிகழ்த்தப்படுகின்றன.

தேடுங்கள்: பாதல் சர்க்காரின் மிச்சில்தான் தமிழில்
தேடுங்கள்.ஊர்வலங்களின் கால்களுக்குக் கீழே நசுங்கிக் கொல்லப்படும்
இளைஞனும், காணாமற் போய்விட்ட கிழவனும் நிஜமான வீட்டுக்கு வழி சொல்லும்
ஊர்வலத்தை தேடுகிறார்கள். அன்பை முன்னிறுத்தும் நிஜமான மனிதர்களின்
ஊர்வலம் எப்போது வரும் ? கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம்
பிடித்துக் காட்டும் கண்ணாடி இந்த நாடகம். பரீக்‌ஷாவின் தயாரிப்பில் இது
முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.

Pareeksha: a pioneering Theatre group founded in 1978 performing
regularly to date. Pareeksha has introduced the plays of Vijay
Tendulkar, Badal Sircar, Brecht, Priestley and Pinter in Tamil besides
the Tamil works of Indira Parthasarathi, Na.Muthusami, Jeyanthan,
Pirabanjan, Aranthai Narayanan, Ambai, S.M.A.Ram,Sundra Ramasami,
Gnani Arigner Anna to the Theatre audiences of Chennai.

Badal Sircar: The founder of the street and open space Theatre as a
movement in India. He introduced the new concept of third Theatre, and
spread the principle of Theatre for conscientisation. His plays
continue to be regularly performed in several Indian languages.

Therdungal :Badal Sircar’s Michil is Thedungal in Tamil. the youth
crushed by the numerous rallies around him and the old man who has
lost his way are both in search of a real procession of human beings
that will show them the way to their real home. Will the procession of
human beings professing love, ever come ? This play through the
chorus form mirrors our life to us. Pareeksha’s version has
transformed the play to the contemporary Tamil milieu.
—————-

Series Navigationகள்ளன் போலீஸ்கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    GovindGocha says:

    அறிஞர் அண்ணா — மற்றவர்களுக்கு அடைமொழி கிடையாதா ஞாநி அவர்களே…. :)

  2. Avatar
    s.ramasamy says:

    திண்ணை மீண்டும் பகிரங்கமாக வடிவெடுத்ததில் மகிழ்ச்சி. ஓர் வேண்டுகோள். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கள் மீண்டும் விளக்கமாக ஓர் கட்டுரை எழுத இயலுமா? அல்லது எழுதியது எங்கு கிடைக்கும்? நன்றி.

  3. Avatar
    s.ramasamy says:

    ஏதோ ஒரு நினைவில் திண்ணை ஞாநியால் நடத்தப் படுவதாக எண்ணிக் கொண்டு எழுதப்பட்டதைத் தவிர்த்து விடவும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை குறித்துத் திண்ணையில் கட்டுரை வந்திருப்பதாக அறிகின்றேன். அதன் விபரம் தரவும். நட்புடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *