பாயும் புதுப்புனல்!

 CBF2015-724x1024

                         _ லதா ராமகிருஷ்ணன்

38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது!

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ இடையூறுகள், பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவரும் புதுப்புனல் பதிப்பகத்தார் தோழர் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் 152 _ 153 என்ற இரண்டு அரங்குகளில் தங்களுடைய வெளியீடுகளையும், குறிப்பிடத்தக்க சமூக, இலக்கிய நூல்களையும் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

தோழர் ரவிச்சந்திரனின் ‘கைக்குள் பிரபஞ்சம்’ என்ற நாவல் _ அளவில் சிறியதானாலும் அடர்செறிவானது. மாறும் காலத்தில் ஒரு கடைநிலை ஊழியனின் வாழ்க்கை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துப் பேசும் படைப்பு, கோவை ஞானியின் திறனாய்வு நூல்கள், புதுப்புனல் சிறுகதைகள், புதுப்புனல் கவிதைகள் இடம்பெறும் தொகுப்புகள் என குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன. என்னுடைய இரண்டு மூன்று கவிதைத்தொகுப்புகள் புதுப்புனல் வெளியீடுகளே. நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரு.ரவிச்சந்திரனின் மனைவி சாந்தி கணவனின் பதிப்பக வேலையில் அத்தனை ஆர்வமாகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளவர். பார்வையற்றவர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவிப்பவர். புதுப்புனல் பதிப்பகத்தைச் சேர்ந்த சாந்தி நூலகம் வழி சிறுவர் கதைகளை ஆர்வமாக வெளியிட்டு வருகிறார்.

பொருளாதாரப் பின்புலம், அதிகாரப் பின்புலம் ஏதுமின்றி ஆர்வமும், அயரா உழைப்புமாய் இயங்கிவரும் புதுப்புனல் அரங்கிற்கு சென்றுவருமாறு சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரியும் திண்ணை வாசகர்களை, உள்நாடு, வெளிநாடு வாழ் தமிழ்வாசகர்களைத் தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

december issue1 7

 

 

0

Series Navigationதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….