புதுப்புது

புதுப்புது
தொடக்கங்கள்

மூச்சு புதிது
முளைகள் புதிது

பூக்கள் புதிது
புணர்வுகள் புதிது

உதயம் புதிது
உணர்வுகள் புதிது

மழை புதிது
மௌனம் புதிது

ஊடல் புதிது
கூடல் புதிது

காதல் புதிது
காமம் புதிது

உயிர் புதிது
உறவுகள் புதிது

சிந்தனை புதிது
சித்திரம் புதிது

அருவி புதிது
அலைகள் புதிது

தென்றல் புதிது
தெம்மாங்கு புதிது

இந்த நொடியில்

இதயம்
துடிப்பது புதிது
இரத்தம் துளிர்ப்பதும் புதிது

தோற்றங்கள்
புதிதானதால்……

தொடக்கங்களும்
புதிது!
புதிது!!
புதிது!!!

அமீதாம்மாள்

Series Navigationசொற்களின் வல்லமைபோதுமடி இவையெனக்கு…