புத்தாண்டு பிறக்குது

சி. ஜெயபாரதன்கனடா

புத்தாண்டு பிறக்குது ! நமக்கு

புத்தாண்டு பிறக்குது !

கடந்த ஆண்டு மறையுது, நடந்த

தடம் மாறப் போகுது !

வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு

திக்கு மறையப் போகுது.

கணனி யுகம் பின்னி உலகு

பொரி  உருண்டை ஆச்சுது.

வாணிப உலகு கூடி இயங்கி

நாணய மதிப்பு  உயருது

விலை மதிப்பு ஏறப் போகுது.

ஐக்கிய நாட்டு மன்றம்

அமைதி கண்காணித்து வருகுது.

பூகோளச் சூடேற்றம் புவியோரை

ஒன்று படுத்திப்

போரணியில் நிறுத்தி விட்டது.

வித்தைகள் இணைந்து உழைக்கணும் !

விஞ்ஞானம் மக்கள் நலம் பெருக்கணும் !

வேலைகள் பெருகணும் !

ஊதியம் உயரணும்.

சித்தர்கள் மண்ணில் பிறக்கணும் !

பித்தர்கள் தெளிவாகணும் !

புத்திகள் கூர்மை ஆகணும் !

கத்திகள் ஏர்முனை ஆகணும்.

யுக்திகள் புதிதாய்த் தோன்றணும்.

சண்டைகள் குறையணும் !

ஜாதிகள் கைகோர்த்து உழைக்கணும் ! 

சமய இனத்தர் கூடி வசிக்கணும் !

திறமைகள் ஒன்றாகி வலுக்கணும்

வறுமை குன்றி வருவாய் பெருகணும்.

நீர்வளம் பெருக்கணும்.

நிலவளம் உணவு அறுவடை செய்யணும்.

வேளாண்மை விருத்தி ஆகணும் !

பசுமை மின்சக்தி யந்திரங்கள் ஓட்டணும்.

பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !

லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !

நீர்வளம், நிலவளம், சூழ்வெளித்

துப்புரவு செய்யணும் !

விடுதலை நாடு சீராய்த் தழைக்க,

கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்

பொறுப்புகள் ஏற்கணும் !

தேசப் பற்று மனதில் ஊற்றாகணும் !

தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !

தேச மாந்தர் நேசம் பெருகணும் !

+++++++++++

Series Navigationசங்கிலி25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”