பேச்சாளர்

‘வயது ஏற ஏற

வயிறை மற

ருசிகள் துற

முடியும் இதுவெனில்

விதியும் உனக்கு

வேலைக்காரனே’ என்று

சொற்பொழிவாளர்

சொடுக்கிய மின்னலில்

இடிகளாக கரவொலிகள்

அந்தப் பேச்சாளருக்கு

கொழுப்பு இனிப்பு

அழுத்தம் என்று

அத்தனையும் உண்டு

பேச்சு முடிந்தது

விருந்து அடுத்தது

ஆடு,கோழி,மீன்,ஊடான்

காடை,நண்டு என

எல்லாமுமே அவர்

துறக்க வேண்டிய ருசிகள்

சட்டை உயர்த்தினார்

இன்சுலின் இறக்கினார்

அடித்து நொறுக்கி

மென்று இறக்கினார்

மிச்சம் ஏதுமின்றி

அமீதாம்மாள்

Series Navigation9. தேர் வியங்கொண்ட பத்துகதி