மாமன் மச்சான் விளையாட்டு

author
4
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 33 in the series 3 மார்ச் 2013
                   வே.ம.அருச்சுணன் – மலேசியா 
மாமன் மச்சான் விளையாட்டை
மிகவும் பக்குவமாகப்
பன்னிரண்டு முறை விளையாடியது
போதாதென்று விளையாட்டுக்காட்ட
பதின்மூன்றாவது முறையும் படையுடன்
புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’
இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை
மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்…..!
தமிழனைக் குழியில் தள்ள
பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே
முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான்
வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான்
நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால்
நாளுங் கெட்டத் வீரத்தமிழன்
வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான்
இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த்
தமிழன் முதுகில்  பவனிவரலாம் அல்லவா?
தேர்தல் கொள்ளையுரையைப்
பவிசுடன் அறிவிக்கிறார்
பக்கத்தான் மச்சான்
புத்திராஜெயாவே குறியாய் எண்ணி
அல்லும் பகலும் பாடாய்ப் படுகிறார்
புதுவாழ்வு பொத்துக் கொண்டு வரப்போகுது என்றே
மச்சான் பின்னால் சென்று
ஆள்சேர்த்தத் தமிழனுக்கு மீண்டுமொரு
செவினி அறை…..!
உலகில் தமிழனை வாழவிட்டது யார்?
பர்மா தமிழர்கள் கட்டியத் துணியோடு
நாட்டைவிட்டு விரட்டப்படவில்லையா?
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை
ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
நம் கண்ணெதிரே கொன்று தீர்க்கவில்லையா?
இங்குள்ளத் தமிழன் என்பவன்
கைகட்டி, வாய்ப்பொத்தி, கக்கத்தில் துண்டை
அடைப்பவன் மட்டும் தானா?
மானம்,ரோசம் இல்லாதவனா?
அறிவற்றப் பிண்டமா?
ஓட்டுரிமை அற்றவனா?
நாட்டு வளர்சிக்கு ஒன்றுமே செய்யாதவனா?
சபா,சரவாக் மக்களுக்கு வளர்ச்சியுண்டு
பூர்வீக மக்களுக்கு நிலமுண்டு,உயர்வான கல்வியுண்டு
நிம்மதியான வாழ்வுக்கும் உத்திரவாதமுண்டு
ஆனால்,
இருநூறு ஆண்டுகள் முன்நாட்டை வளமாக்கிய
தமிழனுக்கு தேர்தல் வாக்குறுதித் தருவதில்
பே…பே….வா?
கண்கட்டி வித்தையெல்லாம் போதும் மச்சான்
புதுசா நீவேற நெய்பந்தம் உயர்த்திப் பிடிக்கவேண்டாம்
மாமன் மச்சான் விளையாட்டெல்லாம்
காட்டினது  போதும் மச்சான்
இனி நம் வாழ்வில் ஏமாற்றம் வேண்டாம்
நம்வாழ்வில் மாற்றம் காண
நமது உரிமையைக் காத்திடுவோம்
அணி திரண்டிடுவோம்….!
சுயநலப் பேர்வழிகள்
நம்மைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்துவதை
தடுத்திடுவோம்,விழித்திடுவோம்
நமது சந்ததி வளமுடன் வாழ்வதற்கு
உரிமையை எவ்வளவு விலை கொடுத்தும்
மீட்டெடுப்போம்
வாக்கை சரியாகப் பயன்படுத்துவோம்
இந்த வாய்ப்பை நழுவவிடோம்
நம்மைக் கருவறுத்தக் கொடியோர்களை
வேரறுக்கக் கைகொடுப்பீர்
வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பீர்
மானம் காக்க விரைந்து வாரீர்
இது நமது இறுதிப்போர
உயிருள்ளவரைப் போராடவேண்டும்
ஓட்டுரிமை என்ன வென்று காட்டிடுவோம்……!
Series Navigationநீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..நிழல்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    கட்டுரை பகுதியில் வந்திருக்க வேண்டியது !!

  2. Avatar
    paandiyan says:

    மத சார்பற்ற தீட்டு பட்டுவிடும் என்பதால் உங்களுக்கு இங்கு சப்போர்ட் கிடைபது ரொம்ப கடினம். பேசாமல் ஸ்ரீலங்கா போய்விடுங்கள் – பொங்குவான் தமிழன்

  3. Avatar
    வே.ம.அருச்சுணன் says:

    வணக்கம், இக்கவிதை முழுக்க முழுக்க மலேசிய அரசியலை பற்றிய கவிதை.இவற்றை படிக்கும் முன்னே மலேசிய அரசிலை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.மலேசிய தமிழர்களின் இன்றைய அரசியல் நிலையை விளக்குவதே இக் கவிதை.நன்றி

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

  4. Avatar
    paandiyan says:

    நன்றி அருச்சுணன், ஸ்ரீலங்கா விசயமாக இங்கு நடக்கும் அரசியல் போராட்டங்கள் , உங்கள் நாட்டில் நடந்த மிக பெரிய போராட்டம் போது இங்குகாத்த அமைதியின் , சுறுக்கமாக என் கருத்து இருந்தது மற்றபடி அங்கு நடப்பவை எல்லாம் எனக்கு தெரியும் என்பது போல இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *