முதுகில் பதிந்த முகம்

பால்கனியில் தொற்றியபடி
கண்மறையும் வரை
கையாட்டி உள்வந்து
படுக்கை விரிப்புகளை
உதறிச் செருகும்கணம்
இரவு ஊடலில்
திரும்பிப் படுக்க
முதுகில் பதிந்த முகம்
மீசையொடு குறுகுறுக்க
வண்டியில் செல்லும்
உன் முதுகில்
என் மூக்குத்தியின் கீறல்
சற்றே காந்தலோடு.

Series Navigationகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழாராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்