“ரொம்பவே சிறிதாய்….”

ஞா.தியாகராஜன்

வீட்டு கடன்
பொருளாதார சிக்கல்
உனக்கு சில இடங்களில் இருக்கும் செல்வாக்கு
சாதுர்யமாய் சிலரை ஏமாற்றுவது
உன் செல்ல பிள்ளைகளின் குறும்பு
யார் மீதோ உனக்கிருக்கும் குரோதம்
உலக சினிமா
தலித் அரசியல்
கொஞ்சம் அறம்
காய்ந்து போன பழைய நினைவுகள்
ஒரு பிரிவின் துயரம்
தமிழ் கலாச்சாரம்
விளிம்பு நிலை மக்களுக்கான விடிவு நியாயம்
அழகான இடங்களில் எடுத்து கொள்ளும் புகை படங்கள்
யாரையோ அவமானப்படுத்திய நம் பிரதாபங்கள்
நீ வாங்கிய பூத்தோட்டி
உன் கணவன் அல்லது மனைவி
உனக்கு உறுதியளிக்கும் ஒரு வேலை
எப்போதும் பூரிப்பு
சில நேரங்களில் போராட்டம்
துரோகம்,புறக்கணிப்பு,அலட்சியம்,காதல்,பெண்கள்

சொல் நண்பா…
நாம் இவ்வளவு தானா.
இதற்குமேல் ஒன்றுமே இருப்பதில்லையா பேச,விவாதிக்க,பரிமாற,உணர.

Series Navigationபெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை