விவசாயி

 

வானம்பார்த்த பூமி

விதைத்தால் விறகாகும்

கருவேல மரங்கள்

——————————————————-

 

கண்ணீர்விட்டு வளர்த்தோம்

இந்தவருடம் பூப்பெய்தியது

எங்கவீட்டு புளியமரம்

——————————————————-

 

கண்ணைப் போல்

தென்னை வளர்த்தோம்

இளநீர் தந்தது

——————————————————-

 

குழிவிழுந்த வயக்காடு

தாகம்தீர்த்துச் சிரித்தது

மழையால்

——————————————————-

 

உழைத்துக் களைத்த உழவன்

உறங்கத் துடிக்கும் தாய்மடி

மரங்கள்

Series NavigationAll India Tata Fellowships in Folklore 2012-2013ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.