கணிதன்

This entry is part 3 of 16 in the series 6 மார்ச் 2016

 

0

போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்!

0

செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம் லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சியில் சேர்வது. அதே போன்ற லட்சியத்துடன் இருக்கும் அனு அவனைக் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலின் ஒரு கண்ணி என சந்தேகித்து காவல்துறை அவனை கைது செய்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலையாகும் கவுதம், துரா சர்க்கார் எனும் சதி வளையத் தலைவனை கண்டறிந்து தீர்த்து கட்டுவது க்ளைமேக்ஸ்.

கணிதன் என்கிற தலைப்புக்குப் பொருத்தமில்லாமல் உடல் வலுவையே பெரும்பாலும் நம்பியிருக்கும் கவுதமாக அதர்வா கொஞ்சம் தேறுகிறார். உடலை இறுக்கும் உடைகளின் சுருக்க வளைவுகளோடு அனுவாக கேதரின் தெரசா சூடேற்றுகிறார். நாயகனை விட புத்திசாலியாக செயல்படும் வில்லன் துரா சர்க்காராக புதுமுகம் தருண் அரோரா அசத்துகீறார். இனி பல படங்களில் நாயகனிடம் அடிபடுவார். ராமலிங்கமாக நரேனும், குடும்ப நண்பராக பாக்யராஜும், வக்கீல் பாலாஜியாக கருணாகரனும் கறிவேப்பிலையாக மணம் சேர்க்கிறார்கள்.

இயக்குனர் டி.என்.சந்தோஷ்,திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். வெகு ஜன ரசனைக்காக, வில்லன் நாயகனைத் தேடிக் கொண்டிருக்கும் அபாயக் கட்டத்தில் கூட, குத்துப் பாட்டை நுழைத்திருப்பது அவரது அனுபவமின்மையைக் காட்டுகீறது.

“ ஒருவனோட வெற்றிக்குப் பின்னால யாரும் இல்லாம இருக்கலாம். ஆனா பல தோல்விகள் இருக்கும்”

இங்க்லீஷ் வெறும் லாங்க்வேஜ்/ மொழிதான். அது நாலட்ஜ் / அறிவு இல்ல “

சில இடங்களில் பளிச்சிடும் வசனங்கள்.

முதல் முறையாக இசைத்திருக்கும் ட்ரம்ஸ் சிவமணியின் பாடல்கள் எல்லாமே குத்து ரகமாக இருப்பது வேதனை. பின்னணி இசையில் சின்னா வெரைட்டி காட்டி வசீகரிக்கிறார்.

அரவிந்த் கிருஷ்ணாவில் ஒளிப்பதிவில் துரத்தல் காட்சிகளில் வேகமும், பாடல் காட்சிகளில் வசிகரமும் சபாஷ் போட வைக்கின்றன.

திரில்லர் படங்களுக்கு நீளம் மிக முக்கியம். ஆனால், 148 நிமிடங்களில், கணிதன் எல்லைக் கோட்டைத் தாண்டி தூரமாக ஓடியது கொஞ்சம் ஆசுவாசத்தைத் தருகிறது. மாயா பாண்டியில் கலை வண்ணத்தில் வில்லனின் கொட்டகைகள் பலே!

0

பார்வை : இழுவன்

0

மொழி : ‘மெட்ராஸ்’ பொண்ணு கேதரினை பிராய்லர் கோழியா உரிச்சிட்டாங்களே மாம்ஸ்!

0

Series Navigationஇந்த வார்த்தைகளின் மீதுஆறாது சினம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *