படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி

This entry is part 1 of 23 in the series 18 ஜனவரி 2015

 

” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம்  இது என்று சுட்டிக் காட்டியவர்  கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது.இது குறித்த சட்டம் 2010ல்  அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்கள்.

மாநில சிறுபான்மையினருக்கான தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய் மொழியில் வழங்குவதில் மாநில அரசின் பொறுப்பாக்கியது அரசியல் சட்டம். எல்லா மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்  என்பதை இந்திய அரசும் ஒப்புக்கொண்டது.  கல்வி தருவது அரசியல் சட்ட்த்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்.லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழிலே.. சமீபத்தில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பொன்று தாய்மொழி வழியாக்கக் கல்வி வழங்கும் சட்டத்தை நிராகரித்திருக்கிறது.  பொது நன்மையை காக்க அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து விட்டது.இது தாய்வழிக்கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களுக்குப் பேரிடியாகும்.

தாய்மொழிக் கல்வி பற்றி அவரின் பணிகாலத்திலும், இலக்கியப் பணியிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருபவர் பொன்னீலன் அவர்கள்.மொழிவழிப்பட்ட இன வளர்ச்சியே மனித குலத்தைப் பரிபூரண மனித லட்சியங்களை நோக்கி மேலும் மேலும் செலுத்தும் . பண்பாட்டு விடுதலை என்பது அரசியல் பொருளாதார விடுதலையோடு அவசியம் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். அதைத்தான்  “ தாய் மொழி வழிக்கல்வி “ என்ற சிறு நூலிலும் வலியுறுத்துகிறார்.அவரின் சில அபிப்பிராயங்களைக் கேளுங்கள்.

 

 

  1. ஒரு இனத்தின் முகத்தை வடிவமைப்பதில் மொழிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2. பண்பாட்டின் உட்கரு மொழியே. ஒரு இனத்துக்கு ஆளுமை, சுயசிந்தனை, அழகு, பெருமிதம், கர்வம்  தருவது மொழியே.3.aaaஆங்கிலம்  பயன்பாட்டுத் தத்துவம் கொண்ட்து. பிஞ்சு பருவத்தில் ஆங்கிலம் படிக்கும் மனதும் இப்படிப்பட்டப் பார்வையோடுதான் வளரும். மனித மதிப்பை விடப் பண மதிப்பையே பெரிதெனக் கருதும். 4. மண்ணுக்கும் , சூழலுக்கும் ஏற்ப உருவாகும் மனித உடல் போல மனித உழைப்புக்கும் உணர்வுக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு மொழியை மையமாகக் கொண்டே மனித மூளை கட்டமைகிறது.தாய் மொழியும் தாய் உணர்வும் குழந்தையின் மூளையைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றுகின்றன. 5. அந்நிய மொழியின் எதிர்திசைக் கட்டமைப்பானது ஏற்கனவே அமைந்துள்ள தாய் மொழிக் கட்டமைப்போடு முரண்படும் 6. வெள்ளைக்காரத் தமிழனின் திமிராட்சி சாதாத்தமிழன் தலையை நசுக்காதா 7. கல்வியை அல்ட்சியப்படுத்தினால் அல்லது அரசியல் படுத்தினால் சமூகத்தின் எதிர்காலமே சீர்கெட்டுப் போகும் 8. கல்வி வழியெ ஒரு தலைமுறையில் ஏற்படும் கோளாறு ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.

 

( தாய் மொழி வழிக்கல்வி – பொன்னீலன் , நியூ சென்சரி புக்ஸ் சிறு  வெளியீடு ரூ 20 )

Series Navigationதிரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *