மெய்த்திரு, பொய்த்திரு

author
1
0 minutes, 45 seconds Read
This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

எஸ் ஜெயலட்சுமி

 

                               ஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை யான வழியில் சேர்த்த செல்வமும், அரச பதவியும், மக்கள் அச்சமின்றி வாழ்வதும் ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.

 

கோசல நாட்டின் வளத்தைப் பேச வந்த கம்பன் ஐந்தறிவு படைத்தவைகளும் எப்படி ஒன் றுக் கொன்று அனுசணையாக ஆதாரமாக இருக்கின்றன என்பதை இப்படி விளக்குகிறான். அன்னம் தன் குஞ்சைத் தாமரை மலர்ப்படுக்கையிலே படுக்க வைக்கிறது. அன்னக் குஞ்சு எருமையின் பாலைக் குடித்து விட்டு நிம்மதியாகத்

தூங்குகிறது. அந்தப் பால் எங்கிருந்து கிடைத்தது?

“கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி

நினைத்து முலைவழியே நின்று பால்

 

சொரிந்ததால் கிடைத்த்து. அன்னக்குஞ்சு தூங்க யார் தாலாட்டுப் பாடுகிறார்கள்? அந்த வயல்களிலுள்ள தேரைகள்

 

 

 

 

 

தான் தாலாட்டுப் பாடுகின்றன.அந்தக் காட்சியைக் கவிஞன் எப்படிச் சொல்கிறான்?

சேல் உண்ட ஒண்கணாரின்

திரிகின்ற செங்கால் அன்னம்

மால் உண்ட நளினப் பள்ளி

வளர்த்திய மழலைப் பிள்ளை,

கால் உண்ட சேற்று மேதி

கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பால் உண்டு, துயில, பச்சைத்

தேரை தாலாட்டும் பண்ணை.

 

என்று கோசல் நாட்டின் எருமை கூட இரக்கத்துடன் கனிந்து, கசிந்து, தன் பாலைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைக் காட்டு கிறான் கம்பன். தேரைகளும் அன்னக் குஞ்சுக்குத் தாலாட்டுப் பாடுவதைக் காண்கிறோம்.

 

மக்கள் பண்பு

அந்நாட்டு மக்கள் எப்படி யிருக் கிறார்கள்? அம்மக்கள் அழகென்று எதைக் கருதுகிறார்கள்? புற அழகை அவர்கள் அழகென்று கருதுவதில்லையாம். நற் குணத்தையே அவர்கள் அழகென்று மதிக்கிறார்கள். அவர் களுடைய பொய்மை இல்லாத உண்மை நிலையால் அந் நாட்டில் நீதி நிலைத்து நின்றது. அந்நாட்டுப் பெண்களின்

 

 

 

 

 

 

அன்பால் அறங்கள் நிலை பெற்றிருந்தன. அவர்களுடைய கற்பால் பெய்யெனப் பெய்யும் மழையும் காலத்தே தவறா மல் பெய்ததாம். இதை

 

பொற்பின் நின்றன பொலிவு, பொய் இலா

நிற்பின் நின்றன நீதி, மாதரார்

அற்பின் நின்றன அறங்கள், அன்னவர்

கற்பின் நின்றன காலமாரியே

 

என்பதால் அறிகிறோம்.

 

அயோத்தி, மெய்த்திரு

இந்நாட்டின் தலைநகரான அயோத்தி செல்வோம். இதை நிலமகளுடைய முகம் என்று சொல்லலாமா! அம்முகத்திலுள்ள திலகம் என்று சொல்ல லாமா! இல்லை அவளுடைய கண்களோ! அவள் அணிந்தி ருக்கும் மங்கல நாணோ! மார்பிலே அலங்கரிக்கும் மணி மாலையோ! அவளுடைய உயிரோ! திருமகள் உறையும் தாமரையோ! திருமாலின் நன்மணிகள் வைக்கப்பட்ட ஆபர ணப் பெட்டியோ! வைகுந்தமோ! ஊழிக் காலத்தில் சகல ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கும் மாயோனின் திரு வயிறோ! என்று வியக்கிறோம்

 

 

 

 

 

 

 

 

 

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!

நிறை நெடு மங்கல நாணோ!

இலகு பூண்முலை மேல் ஆரமோ! உயிரின்

இருக்கையோ! திருமகட்கு இனிய

மலர்கொலோ! மாயோன் மார்பில் நன்மணிகள்

வைத்த பொற்பெட்டியோ! வானோர்

உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி

உறையுளோ! யாது என உரைப்பாம்?

 

என்று கவிஞனே திகைக்கிறான்.

மதிலையும் அகழியையும்

கடந்து சென்றால் நம் கண்ணில் தென்படுபவை மாளிகைகள்

இந்த மாளிகைகளைப் பார்த்து விட்டு சந்திரனைப் பார்த்தால் அந்தச் சந்திரனும் கருப்பகத் தோன்றும். அவ்வளவு வெண் மையான மாளிகைகள்! வானோங்கி உயர்ந்து விளங்கும் இந்த வெண்ணிற மாளிகைகள் கடும் காற்று வீசும்போது மேலெழுந்து பாற்கடலின் அலைகளைப்போல் தோன்றுகிறது.

 

திங்களும் கரிதென வெண்மை தீற்றிய

சுங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை

வெங்கால் பொர, மேக்கு நோக்கிய

பொங்கிரும் பாற்கடல் தரங்கம் போலுமே

 

 

 

 

 

 

அயோத்தி நகரிலுள்ள பெண்கள்

பந்தாடுகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்களி லிருந்து முத்துக்கள் சிந்துகின்றன. பணிப் பெண்கள் அம் முத்துக்களைச் சேகரிக்கிறார்கள்.இம்முத்துக்களின் ஒளியின் முன்னால் சந்திரனுடைய ஒளியும் குறைந்து விடுமாம். இந்

நகரமெங்கும் பலவித ஒலிகள் கேட்கின்றன. அவை என்ன வென்று கேட்போமா?

 

வளை ஒலி. வயிர் ஒலி, மகர வீணையின்

கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,

துளை ஒலி, பல்லியம் துவைக்கும்

சும்மையின்

விளை ஒலி, கடல் ஒலி மெலிய விம்முமே

 

நகரத்திற்குள் செல்கிறோம். அங்குதான் எத்தனை மண்டபங்கள்!

 

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்

அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்

உன்ன அரும் அருமறை ஓது மண்டபம்

பன்ன அருங்கலை தெரி பட்டி மண்டபம்

 

மன்னர்களுக்கெல்லாம் மன்ன

 

 

 

 

 

 

 

 

னாக விளங்கும் அயோத்தி மன்னனுக்குச் சிற்றரசர்கள் செலுத்த வேண்டிய கப்பத்தைச் செலுத்த மண்டபங்கள் இருந் தன. எந்த ஒரு நாட்டிலும் ஓவாப்பசியும், உறு பிணியும், கல வரங்களும் இல்லாமல் இருந்தால்தான் அந்நாட்டில் கலை வளம் சிறக்கும். அப்படி ஒரு நிலை இருந்ததால்தான் அயோத்தியில் பெண்கள் ஆடுவதற்காகவே மண்டபங்கள் இருந்தன. வேதங்கள் ஓதவும் தனி மண்டப்ங்கள்!

 

அயோத்தி நகரத்தில் வாழ்ந்த மக்கள் செல்வச் செருக்கோடு வாழ்ந்தார்கள். கவலையே இல்லாத வாழ்க்கை. அவர்கள் வாழ்க்கை எப்படி யிருந்தது?

 

காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்

ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும் உம்பர்

வீடும் விரவும், மணப்பந்தரும், வீணை வண்டும்

பாடும் பொழிலுமாக

 

அயோத்தி விளங்கியது.

இது மட்டுமல்ல, அந்நகரில் கள்வர்களே இல்லையாம். அதனால் காவலும் இல்லை. தானம் வாங்குவதற்கு யாருக்குமே தேவையில்லை. அத னால் கொடுப்பவர்களும் இல்லை. அயோத்தியில் எல்லோ ருமே கற்றவர்களாக இருப்பதால் இவர்தான் கல்வியில் சிறந்தவர் என்று எவரையும் சுட்டிக் காட்ட முடியாத நிலை.

 

 

 

 

 

 

மேலும் அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோருமே கல்வி, பொருள் ஆகிய எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்ததால் அந்நகரில் இவன் ஏழை, இவன் பணக்காரன் என்ற பேதம் இல்லை.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்

கல்விமுற்ற

வல்லாரும் இல்லை; அவை வல்லர்

அல்லாரும் இல்லை

எல்லாரும் எல்லாப் பெருஞ்

செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை

 

என்பதைக் காணலாம்

இப்படி அயோத்தி மாநகர் கல்வி என்னும் வித்திலிருந்து முளைத்து மேலெழுந்து வலிமை வாய்ந்த கிளைகளை எங்கும் பரப்பி, அரிய தவமாகிய இலை கள் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து, இன்பம் என் னும் பழம் பழுத்த பழமரம் போல் பொலிவுடன் விளங்கியது.

 

இலங்கை

 

கவிஞன் காட்ட அயோத்தி யைக் கண்டோம். அனுமன் பார்வையில் இலங்கையைப் பார்ப்போம். ஏனென்றால் அவன் இரவு பூராவும் இலங்கை

 

 

 

 

 

 

முழுவதையும் சுற்றி வந்திருக்கிறானல்லவா? இலங்கை நகரக் காவல் செய்து வந்த லங்கிணியை வென்று வீழ்த்திய அனுமன் இலங்கையப் பார்க்கிறான். முதல் பார்வை யிலேயே

நாகர் பொன்னகர் இதனை ஒக்கும்

என்பது புல்லிது அம்மா!

 

என்று வியந்து பேசுகிறான். பின் உயர்ந்த மாடங்களைப் பார்க்கிறான். அவை

 

பொன் கொண்டு இழைத்த?

மணியைக் கொடு பொதிந்த?

மின் கொண்டு அமைத்த?

வெயிலைக் கொடு சமைத்த?

 

இந்த மாடங்கள் எல்லாம் எதைக்

கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன? பொன்னாலா? மணி யாலா? மின்னலாலா? அல்லது வெய்யிலைக் கொண்டா? எதைக் கொண்டு கட்டப் பட்டிருந்தால் இவ்வளவு ஒளியைப் பரப்பும்? என்று வியக்கிறான். இந்த மாடங்கள் தேவேந்திரன் இருப்பதற்கு ஏற்றபடி கட்டப்பட்ட சிறப்புக்களைக் கொண்டது என்று சொன்னால் அதுவும் குற்றமாகும் என்று எண்ணு கிறான்.

 

 

 

 

 

 

 

அனுமனுக்கு இன்னொரு எண்ண மும்தோன்றுகிறது. இலங்கை நகரின் ஒளிவீசும் மாட மாளி கைகளின் அழகால் பொன்மயமான இலங்கை, நீல மேனிய னான திருமாலின் உந்தியில் தோன்றிய பொன்மயமான அண்டம் போலக் காட்சி யளித்தது. மேலும் பார்க்கிறான்.

 

பொன்னின் மால்வரை மேல்.

மணி பொழிந்தன பொருவ

உன்னி நான்முகத்து ஒருவன்

நின்று ஊழ்முறை உரைப்ப

பன்னி, நாள் பல பணி உழந்து

அரிதினில் படைத்தான்

சொன்ன வானவர் தச்சனாம்

இந்த நகரைப் பார்த்தால் பொன் மயமான மலைமேல் மணிகளைப் பொழிந்தது போல் தோன்

றுகிறது. பிரமதேவன் சொல்படி தேவதச்சன் பலநாள் உழைத்து இந்நகரை அருமையாக சிருஷ்டித்திருப்பானோ? என்று என்ணுகிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக இலங் கையினுள் செல்லும் அனுமன் இலங்கை மதிலின் சிறப்பை கண்டு பிரமிக்கிறான். வெப்பமான சூரியன் இராவணனுக்கு அஞ்சி இலங்கை மாநகருக்கு மேலே செல்ல மாட்டான் என்று சொல்கிறார்களே அதுவல்ல உண்மை.

 

 

 

 

 

அந்த மதிலைக் கடந்து போவது கடினம் என்பதால் தான் சூரியனும் ஒதுங்கி போகிறான் என்ற முடிவுக்கு வருகிறான். ‘தேவர் என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவன் ஏவல் செய்பவர்’ என்பதையும் அவர்கள் ராவணனுக்கு ஏவல் செய்ய  மேல் உத்தரியம்  அலையக் குலைய விரைந் தோடுவதை யும் காண்கிறான்.

 

கோபுரவாயில்

இன்னும் கொஞ்சம் உள்ளே

போகிறான் அனுமன். இது என்ன மேருமலை இங்கே எப்படி வந்த்து? என்று நிமிர்ந்து பார்க்கிறான். கொஞ்சம் நிதானிக் கிறான். கோபுரவாயில் தான் அப்படியிருக்கிறதாம். தேவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஏணியோ? என்று பிரமிப்பை ஊட்டுகிறது. இந்த ஏழு உலகங்களும் சிதைவடையாமல் நிலைத்திருக்கும் படிநடுவில் கட்டப்பட்ட தூணோ? என்று வியக்கிறான்.

 

மேருவை நிறுத்தி வெளி செய்தது கொல்?

விண்ணோர்

ஊர்புக அமைத்த படுகால் கொல்? உலகு ஏழும்

சோர்வு இல நிலைக்க நடு இட்ட்து ஒரு தூணோ?

 

என்று பிரமிக்க வைக்கிறது கோபுரம்

 

 

 

 

 

 

 

அரக்கர்களின் பெருமித வாழ்வு

கோபுரவாயிலைக் கடந்த அனுமன் இலங்கையிலுள்ள வீடுகளைப் பார்க்கிறான். அங் குள்ள பெண்கள் எப்படியிருக்கிறார்கள்? என்று லேசாக எட் டிப் பார்க்கிறான். அவர்கள் கையில் சங்கு வளையல்களும் காலில் சிலம்பும், இடையில் மேகலையும் கொலுசும் அணிந்து முரசுகள் ஒலிக்க, தேவ மாதர்கள் மங்கல கீதம் பாட தங்கள் வீட்டு தேவதைகளை மலர் கொண்டு பூசித்து வழிபடுகிறார்கள்.

சிலர் அழகிய பூம்பந்தலில் பொன்னாலான அரங்கம் அமைத்து மணிகள் ஒளிவீச ஆச னத்தில் அமர்ந்து இசையோடு தாளம் ஒலிக்க, காந்தர்வப் பெண்கள் நடனமாடுவதைக் கண்டு ரசிக்கிறார்கள். இவர்கள் தேவமங்கையர்களின் நாட்டியத்தையும் ரசிப்பார்கள்.

 

பாடுவார் பலர் என்னின்,

மற்று அவரினும் பலரால்

ஆடுவார்கள்; மற்று அவரினும்

பலர் உளர் அமைதி

கூடுவாரிடை இன்னியம் கொட்டுவார் பலர்

 

இப்படி இலங்கை மக்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிப் பதை அனுமன் பார்க்கிறான்.

 

 

 

 

 

 

இலங்கை வீரர்கள் பெரிய உடம்பை உடையவர்கள் மட்டுமல்ல, வீரத்திலும் அளவற்ற வர்கள். அவர்கள் உலகத்தையே தோண்டி மேலே எடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பெரிய சேனைக் கூட்டமும் அவர்களி டமிருந்தது அது மட்டுமல்ல அவர்கள் மாயத்திலும் வல்ல

வர்களாயிருந்தார்கள் என்பதையும் அனுமன் உணர்ந்து கொள்கிறான். கால்களில் வீரக்கழலும் கையில் வேலும் கண் களில் நெருப்பையும் உடைய வீர்ர்களையும் அனுமன்

காண்கிறான்.

இலங்கைத் தெருக்களில் ”மரம் அடங்கலும் கற்பகம். மனை எல்லாம் கனகம்” என்று விளங் குகிறது. மேலும் அங்கே குழையும் ஆபரணங்களும் மாலை களும் கணக்கில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. இலங்கை ஒரு போக பூமியாகவே காட்சி யளிக்கிறது. இதைக் கண்ட அனுமன்,

பளிக்கு மாளிகைத் தலம் தொறும்

இடம் தொறும்; பசுந்தேன்

துளிக்கும் கற்பகத் தண்நறுஞ்

சோலைகள் தொறும்

அளிக்கும் தேறலுண்டு ஆடுநர்

பாடுநர் ஆகிக்

களிக்கின்றார் அலால் கவல்கின்றார்

ஒருவரைக் காணேன்

 

 

 

 

 

 

என்று அந்த போக பூமியை  வியந்து பாராட்டுகிறான்.

 

கலைச் செல்வங்களுக்கும் இலங்கையில் குறைவில்லை. சிற்ப, சித்திரத் தொழிலும் அமோகமாக விளங்கியது. அரக்கர் தலைவர்களின் மாளி கைகளுக்கு நடுவே அமைக்கப் பெற்றிருக்கும் ராவணனு டைய மாளிகையின் சிற்பத் திறன் தான் சாமானியமானதா என்ன? ஆனால் அறம் புகாத இலங்கையிலுள்ள மாளிகை யைக் கண்டு அனுமன் “நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த் திரு” என்று அனுதாபம் கொள்கிறான். தருமம் தழைக்காத இடத்தில் திருவும் தங்காது என்பது அனுமனது கருத்து.

 

இராமன் கண்ட இலங்கை

(பாவ பண்டாரம்)

இராமனும் இலங்கையின் செல்வச் செழிப்பைக் கண்டு வியந்து தம்பி இலக்குவனுக்குப் பார் பார் என்று காட்டுகிறான். சுவேல மலை மீதேறி ராமன் இலங்கை யைப் பார்க்கிறான். கண் கூசுகிறதாம்.

 

சூரியனும் வெட்கப்படும்படி அங் குள்ள மாளிகைகளில் பதிக்கப்பெற்ற இரத்தினங்களிலிருந்து

ஒளிக்கற்றைகள் வீசுகின்றன. கண்கள் கூசுவதால் அவற் றைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லையாம்.

 

 

 

 

 

அனுமன் இட்ட தீயால் அவை இப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கிறதோ? என்று தோன்றும் படி ஒளிவெள்ளமாகக் காட்சி யளிக்கிறது இலங்கை.

 

விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற

மணிகள் வீச

சொரிகின்ற சும்மை விசுப்புறத்

தொடரும் தோற்றம்

 

பாராய்! என்று காட்டுகிறான். இலங்காபுரி வறுமை யென்ப தையே அறியாத நகரம். அங்கே பொன்னும் மணியும் பார்க்கும் இடமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பிறர் இரத்தம் சிந்தி சம்பாதித்த பாவச் சுமை. இவள் இதுவரை போகத்தை அனுபவித்திருக்கிறாளே தவிர சோகத்தை அறியாள்.

 

இலக்குவனுக்குப் பவழமாளிகை களைக் காட்டிய பின் நீலக்கற்களால் செய்யப் பெற்ற செய் குன்றங்களைப் பார்த்த ராமனுக்கு அவை யெல்லாமே ஈகை யென்பதே தெரியாத, இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினரான அரக்கர்களின் பாவ பண்டாரத்தின் மொத்த உருவோ என்று தோன்றுகிறது

 

”ஈவது தெரியா உள்ளத்து

இராக்கதர் ஈட்டி வைத்த

 

 

 

 

 

பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம்

பலவும் பாராய்!

 

என்று அந்தப் பாவபண்டாரமான செய்குன்றங்களைக் காட்டு கிறான். ஆம். அரக்கர்கள் சேர்த்து வைத்த பொய்த் திருவைப் பாவ பண்டாரம் என்று ராமன் பொருத்த மாகவே சொல் கிறான். இரக்கமே இல்லாத கொடுமையே உருவான அரக்கர் கள் சேர்த்து வைத்திருப்பது பாவத்தின் குவியல்தானே!

அயோத்தி தரும பண்டாரம். அறிவுப் பண்டாரம். காதலும் அறமும் சேர்ந்தது. அதனால் தான் சீதை அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கை

யைப் பொய்த்திரு என்றும் சொல்கிறாள்.

 

அயோத்தி, மெய்த்திரு.

அசோகவனத்தில் சிறை யிருந்த

பிராட்டிக்கு ஒவ்வொரு காட்சியாக நினைவிற்கு வருகிறது. வசிஷ்டர் வந்து “ராமா! நாளை உனக்குப் பட்டாபிஷேகம் அயோத்தியின் அரசனாக முடிசூடப் போகிறாய்” என்று அரச வையின் முடிவு பற்றிச் சொல்கிறார். இதைக் கேட்ட ராமன் அப்படியே பூரித்துப் போகவில்லை. பொறுப்பை ஏற்க வேண் டுமே என்று கலங்கவுமில்லை. காய்தலும் உவத்தலு மின்றி அப்படியே கடமையாக ஏற்றுக் கொள்கிறான்.

 

 

 

 

 

 

 

பொழுது விடிவதற்குள் காட்சி மாறுகிறது. “ராமா உனக்கு ஏழிரண்டாண்டு வனவாசம், பரத னுக்கு மகுடாபிஷேகம்” என்கிறாள் கைகேயி. அதையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறான் ராமன். ராமன் முகம் எப்படி யிருந்தது. வாட்டமுற்றதா? கோபம் வந்ததா? முகம் கறுத் ததா? சீதை வாயிலாகவே கேட்போம்.

 

மெய்த்திருப்பதம் மேவுகென்ற போதிலும்

இத்திருத்துறந்து ஏகு என்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை

ஒத்திருக்கும் முகம்

 

என்று அந்த முகத்தை நினைத்துப் பார்க்கிறாள்.

 

வனவாசம் என்று கைகேயி கட்டளையிட்ட போதும் ராமன் முகம் அன்றலர்ந்த செந் தாமரை போல் தான் இருந்தது. அதற்கப்புறமும் அந்த முகம் வாட்டமடையாமல் வனவாச காலத்திலும் கூட சித்திரத்தில் அலர்ந்த  செந்தாமரையைப் போல வாடாமலே இருந்ததாம்.

இங்கு தருமமிகு அயோத்தியை மெய்த்திரு என்கிறாள்

 

இலங்கை பொய்த்திரு

மாயா ஜனகனை சிருஷ்டி செய்து, சீதையைப் பயமுறுத்தி தனக்கு இணங்க வைக்கலாம்

 

 

 

 

 

 

என்று அவனை அழைத்து வருகிறான் ராவணன். மாயா ஜனகன் ராவணன் அடிபணிந்து நிற்பதைக் கண்ட சீதை பதைபதைக்கிறாள். உடனே ராவணன் “அஞ்ச வேண்டாம். நீ மட்டும் சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் என்னுடைய ஆட்சி அனைத்தையும் இவனுக்குத் தருவேன். சங்க நிதி, பதுமநிதியையும் புஷ்பக விமானத்தையும் அளிப்பேன். சங்கரன் தந்த வாளையும் வழங்குவேன். மேலும்

 

இந்திரன் கவித்த மௌலி இமையவர்

இறைஞ்சி ஏத்த

மந்திர மரபின் சூட்டி வானவர்

மகளிர் யாரும்

பந்தரின் உரிமை செய்ய, யான் இவன்

பணியில் நிற்பேன்

 

என்று பிதற்றுகிறான்.

இதைக் கேட்ட சீதை வெகுண்டு, ”நீயா இலங்கைச் செல்வத்தை வழங்கப் போகிறாய்? இலங் கையையும் உங்கள் பொய்மையான செல்வத்தையும் பெறப் போகிறவன் வீடணன். நீ என்ன பெறப்போகிறாய் தெரியுமா?

ராமனின் பாணங்களை. அப்பாணங்கள் உன் மார்பில் புகுந்து பிளக்கப் போகின்றன.உன் உடலைப் பேய்கள் தழுவப்

 

 

 

 

 

 

 

போகின்றன. நீ முடிந்து போன செய்தியை அனுமன் என் னிடம் வந்து சொல்வான் என்று கடுமையாகச் சாடுகிறாள்

 

இத்திருப்பெறுகிற்பானும் இந்திரன்

இலங்கை நுங்கள்

பொய்த்திருப் பெறுகிற்பானும் வீடணன்

புலவர் கோமான்

கைத்திருச் சரங்கள் உந்தன் மார்பிடை

கலக்கற்பால

 

என்று சீறுகிறாள். இங்கே இலங்கையைப் பொய்த்திரு என் றும் குறிப்பிடுகிறாள்.

 

திருமகளின் அம்சமான சீதை யின் வாயாலேயே அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கையை பொய்த்திரு என்றும் பேச வைக்கிறான் கம்பன்

Series Navigation
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //திருமகளின் அம்சமான சீதை யின் வாயாலேயே அயோத்தியை மெய்த்திரு என்றும் இலங்கையை பொய்த்திரு என்றும் பேச வைக்கிறான் கம்பன்.//

    அதே மெய்த்திரு அயோத்தி மக்களின் அபாண்ட அவதூறாலே தான் கானகம் ஏகி கடும் துன்பம் கொண்டாள். இறுதிவரை மெய்த்திரு நகர் மீளாமலே நிலம் புகுந்தாள். பொய்த்திரு மக்களால் சீதை மெய்த்துயர் அடையவில்லை.கம்பர் காட்டும் மெய், மெய் அல்ல.பொய், பொய் அல்ல.
    கம்பன் சொல்லி விட்டான் என்று கண்ணை மூடி மண்டையாட்டக்கூடாது.

    மெய்ப்பொருள் காண்பதறிவு!

    கம்பன் கூறும் மெய்த்திரு நகரில் அன்னக் குஞ்சுகளுக்கு எருமை பாலூட்டு கின்றனவாம். அடிச்சு விடுவதில் கம்பன் அசருவதில்லை. பறவை இனங்களில் எந்தப்பறவை பால் குடித்து வளர்கிறது.குட்டி போடுவதுதான் பால் குடிக்கும்.முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை பால் குடிப்பதில்லை.

    பாட்டி வடை சுட்டு காகம் எடுத்து நரி அந்த வடையை சுட்ட கதை போல் உள்ளது.
    நரி என்று பருப்பு வடை திங்கும் சைவ நரியானது.அன்னக் குஞ்சுக்கு எருமைப்பால்?என்ன எழுதினாலும் எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் கண்டு கொள்ள மாட்டான் பக்தி முத்திய தமிழன் என்பதை கண்டான்! கம்பன்.

    மற்றபடி அன்னம் பாலையும் நீரையும் பிரித்து பருகும் என்பதை சரிவர புரியாத கட்டுத்தறி கம்பன் எருமை மாட்டை விட்டு அன்னக்குஞ்சுகளுக்கு அமுதூட்டுகிறார்?
    ஏன்?ஒரு பசு மாடு கிடைக்கவில்லை? எருமைதான் பொறுமையாய் கொடுக்கும்!

    அன்னம் பாலருந்தும் இனமே அல்ல!
    நீர்த்தாவரங்களின் அடிப்பாகம் இனிப்பாக இருக்கும்.அன்னம் தாவரத்தின் அடிப்பாகத்தை கடிக்கும் போது அதிலிருந்து ஒருவித நீர் சுரக்கும்.அந்த செடி நீரே பால் என குறிப்பிடப்படுகிறது.அச்செடியின் பால் நீரோடு கலக்குமுன் அன்னம் அதை உறிஞ்சு விடுகிறது.
    இதையே அன்னம் பாலையும் நீரையும் பிரித்து அறியும் ஆற்றல் அன்னத்திற்கு உண்டு என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *