கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)

This entry is part 21 of 46 in the series 19 ஜூன் 2011

 

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

“நான் அவனுக்குக் கிண்ணம் நிறைய ஆனந்தத்தை அளித்தேன்.  ஆனால் அவனோ அதைத் தரையில் கொட்டி விட்டான், அவனது அறியாமையால் !  பிறகு இருள் தேவதைகள் அந்தக் கிண்ணத்தில் சோக மதுவை நிரப்பினர்.  அதை அவன் அருந்தி ஓர் குடிகாரனாய் மாறினான்.”

 

கலில் கிப்ரான். (The Goddess of Fantasy)

 

 

++++++++++++++++

ஞானமுள்ள மனிதன்

++++++++++++++++

 

 

இறைவனை ஆத்ம நேசிப்பில்

மதிப்பவனே

அறிவுள்ள மனிதன்.

மனிதனின் தகுதி அவன் புரியும்

வினைகளில் தெரியும் !

நிறத்தில் தெரியாது !

இனத்தில் காணாது !

நம்பிக்கை காட்டாது !

பரம்பரை யில் தெரியாது !

நினைத்துப் பார் தோழா !

அறிவுள்ள

ஆட்டி டையன் மகன்

நாட்டு வெகுமதி ஆவான்

ஆளப் போகும்

அறிவற்ற

அரசிளம் குமரனை விட !

அறிவு ஒன்றுதான்

மேன்மைக்கு

மெய்யான முத்திரை !

எவன் தந்தை யானால்

என்ன ?

எந்த இனத்தில் பிறந்தால்

என்ன ?

 

 

(தொடரும்)

 

****************

 

தகவல் :

 

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

 

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

 

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

 

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

 

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

 

For further information:

The Prophet By Kahlil Gibran :

 

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

 

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

 

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

 

 

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2011)

 

 

 

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *