வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது.
–
ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார்.
என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை ஒட்டி ஹால்ல வச்சிருக்கீங்க?
அவர் சொல்கிறார்
டிவியில எப்பவும் இப்படித்தானே வருது? அதனால சீப்பா முடிச்சிட்டேன்.-
தூர்தர்ஷன் என்ற இந்திய அரசின் தொலைகாட்சி வந்த புதிதில் ராஜீவின் முகமே தினந்தோறும் எல்லா நேரமும் பார்த்து அலுத்த மக்கள் தொலைக்காட்சியையே வெறுக்கும் அளவுக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி இருந்தது. எப்போதும் இந்தி நிகழ்ச்சிகள். எப்போதாவது தமிழ் நிகழ்ச்சிகள். கிரிக்கெட் வர்ணனையின் போதுகூட திடீரென்று இந்தியில் வர்ணனை என்று தமிழர்களும் மற்ற மொழி பேசுபவர்களும் வெறுத்துப் போன நிலை. எந்த அளவுக்கு ஊடகம் ஆட்சியில் உள்ளவர்களால் தங்களை பிரச்சார படுத்திகொள்ள அத்துமீறி உபயோகப்படுத்தப்படும் என்பதற்காக இலக்கணம் அது.
இன்று பல நூறு தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அப்போது தூர்தர்ஷனில் பிரபலமாக ஆகியிருந்த பிரன்னாய் ராய் போன்றோர்கள் தற்போது என் டி டி வி போன்ற தொலைக்காட்சி நிலையங்களை நடத்துகிறார்கள். இவர்கள் இப்போதும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஒரு கட்சியின் சார்பாக இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. சன் டிவியும், கலைஞர் டிவியும் நடுநிலையாக செய்தி தரும் என்று திமுக அனுதாபி கூட சொல்லமாட்டார். அதே போல ஜெயாடிவி ஒரு செய்தியை நடுநிலையாக தரும் என்று அதிமுக அனுதாபியும் சொல்லமாட்டார். அது வெளிப்படை. அது ஓரளவுக்கு நேர்மையும் கூட.
ஆனால் என் டி டி வி, சி என் என் ஐபிஎன் , ஆஜ் தக் ஆகிய ஆங்கில, இந்தி தொலைக்காட்சிகள் நடுநிலை என்றுதான் தங்களை பிரச்சாரமும் செய்துகொள்கின்றன. அதே நேரத்தில் ஓரிரு காங்கிரஸ் நபர்களது ஊழலை வெளிக்கொணர்வதிலும் பங்கு வகித்திருக்கின்றன.
ஆனால் அன்னா ஹசாரே, ராம்தேவ் ஆகியோரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னால இந்த ஊடகங்களின் மிகவும் அதிகரித்துள்ள பாரபட்சமான நடத்தை அதிர்ச்சி அளிக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது என் டி டி வி தன் முகப்பில் வைத்திருந்த பேனர் ராஜீவ் காந்தி போஸ்டர் ஒட்டப்பட்ட டிவி பெட்டியைத்தான் நினைவுபடுத்தியது. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வைக்கப்பட்ட போஸ்டரில் ராகுல் காந்தியின் கை அசைக்கும் படம்! ஆமாம் அவர்தானே சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்?
http://twitpic.com/4f1dui
இப்போது ஆஜ்தக் என்ற (இந்தியா டுடே குழுமத்தின் தொலைக்காட்சி) ராகுல்காந்தியை பற்றி ஒரு மணி நேர புகழ்பாடலை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
நீரா ராடியா என்ற இடைத்தரகருடன் என் டி டிவி தொலைக்காட்சியின் முக்கிய ஊடகவியலாளரான பர்க்கா தத் பேசியவை ஒலிநாடாவாக வெளிவந்தன. அதில் அவர்கள் எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்களாகவே செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியின் ஆதரவாளராக இருப்பது தவறில்லை. ஆனால் நடுநிலையான பத்திரிக்கையாளராக இருக்க வேண்டியவர், ஒரு கட்சியின் சார்பாக, “நான் தொலைக்காட்சியில் என்ன சொல்லவேண்டும்” என்று ஒரு இடைத்தரகரிடம் கேட்பது எந்த அளவுக்கு கீழ்த்தரமானது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இவ்வாறு வெளிப்படையாக தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொண்டால், அவர்களது மதிப்பு இறங்கிவிடும் என்று கருதி நடுநிலை போல நடந்துகொள்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களை கேள்வி கேட்கும் போது அடிக்காமல் கேள்வி கேட்பதைக்கூட பார்க்கமுடிகிறது. இவர்கள் ராமதேவின் மீதான இந்திய அரசின் தாக்குதலை, ராமதேவின் சர்க்கஸ் என்று வர்ணித்தார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் 24 மணி நேர போராட்டத்தில் இருந்தபோது தேசபக்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியதை திரும்ப திரும்ப போட்டு பாஜகவின் போராட்டத்தையே கேலிக்கூத்து போல சித்தரிக்க முயன்றன இந்த ஆங்கில ஊடகங்கள். தி இந்துவின் எடிட்டராக பொறுப்பேற்க இருக்கும் வரதராஜன் சுஷ்மா ஸ்வராஜ் காந்தியின் கல்லறைமீது நடனமாடினார் என்று டிவிட் செய்தார். இவர்களிடம் என்ன நடுநிலையை நாம் எதிர்பார்க்கமுடியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓரளவுக்கு இந்த காங்கிரஸ் ஊடகங்கள் அவ்வப்போது எதிர்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கின்றன என்பதை நாம் பாராட்டுதலுடன் பார்க்க வேண்டும்.
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்