கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)

This entry is part 22 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்களின் வேலை
முன்னுள்ளதைக்
காண்ப தற்கு. !
ஆத்மா இருப்பது தனது
ஆனந்தத் திற்கு !
மூளையின் பயன் இதுதான்
மெய்யாய் ஒருத்தியை
நேசிப்ப தற்கு !
கால்களின் பணி
காதலியின் பின்னே செல்வது !

+++++++++++++

வான வெளியில் காதல்
காணாமல் போகும் !
என் மனது
ஓடிப் போனது, மனிதர்
ஏது செய்வார்
என்ன முயல்வார் என்றறிய !
புதிர்கள்
விடுவிப்பதற் கில்லை !
கண்கள் குருடாய்ப் போகும்
காரணம்
காணப் போனால் !

++++++++++++

காதலன் மேல் பழிவிழும் !
காதலியை அவன்
கண்ட போது
இழந்தவை எல்லாம் மீளும்
முழுதும் மாற்ற லாகி !
மெக்கா வுக்குப் போகும்
பாதையில்
அபாயங்கள் அதிகம் !
திருடர் பயம் !
தீவிரமாய் அடிக்கும்
மணற் புயல் !
ஒட்டகப் பால் தான்
குடிப்ப தற்கு
மட்டும் கிடைக்கும் !
ஆயினும் பயணிகள் அனைவரும்
ஆங்கே முத்த மிடுவர்
கருங் கல்லை தூய
விருப்போடு
நிலத்தைச் சுவைத்த
இதழோடு !

+++++++++++

புது நாண யத்தை
அச்சடிப்பது போல் உள்ளது
இந்தப் பேச்சு !
பூமியைத் தோண்டும்
ஒருவர்
மெய்ப் பணிகள்
வெளியே
புரியும் போது
குவியும் நாணயம்
மலையாய் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 21, 2011)

Series Navigationபசி வகை!எடை மேடை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *