கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)

This entry is part 30 of 44 in the series 30 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது கண்கள் பல்லாண்டுகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கி வந்தவை. அவரது செவிகள் வாழ்க்கையின் குரல்களைக் கேட்டிருப்பவை. அவரது அறிவுரைகளை நீ வெறுத்தாலும் அவற்றுக்கு உன் கவனத்தைச் செலுத்து.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

திருமணப் பாதையில் !

காதலியின் முதல் ஓரப் பார்வை
கடல் மீது
நடக்கும் ஆன்ம உணர்ச்சி.
வானுலகையும்
பூவுலகையும் உதய மாக்கும் அது !
(இல்லறத்தில் தம்பதிகள்
இணைவதை)
“அவ்விதம் நிகழட்டும்” என்று
ஆசிகள் வழங்கினார்
ஏசு நாதர் !
காதலர் இடும் முதல் முத்தம்
வாழ்க்கை அமுது
பொங்கிடும் கிண்ணத்தில்
வாய் வைத்துக்
குடிக்கு,ம் முதல் மடக்கு !
ஆன்மாவின் ஐயத்துக்கும்
இதய பயத்துக்கும்
இடையே
பிரிக்கும் கோடு அது !
பூரிப்பை
உள்ளத்தின் உள்ளே
உறுதியாய்ப் பொழிவது !
வாழ்வுக் கீதத்தின் துவக்கம் !
பூரண மானிடத்தின்
நாடக அரங்கில்
ஆரம்ப மாகும் முதல்
அங்கம் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26, 2011)

Series Navigationஅவர்களில் நான்கூடங்குளம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *