கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)

This entry is part 35 of 37 in the series 27 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“நேற்று என் செயலுக்கு வருந்தினேன்; இன்று தவறை உணர்ந்து என் வில்லை முறித்து நடுக்கத்தை ஒழித்த போது நான் என்மீது ஏற்றிக் கொண்ட தீங்குகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன்.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

அறிவும். பகுத்தாய்வு நெறியும்

உன்னோடு உன் பகுத்தாய்வு
வழி முறை
உரையாடும் போது
என்ன சொல்லுது உன்னிடம்
என்று கூர்ந்து கேட்பாய் !
அப்போது நீ
பாதுகாக்கப் படுகிறாய்
ஆயுதம் பெற்று !
ஏனெனில் கொடுக்க வில்லை
இறைவன் உனக்கு
பகுத்தாய்வு போலொரு
வழிகாட்டி நெறி முறையை,
வலுவான ஆயுதம் அது !

உள்ளத்தின் உள்ளிருக்கும்
உன் சுயமோடு
பகுத்தாய்வு நெறி
உரையாடும் போது
இச்சைக்கு எதிராய் நீயொரு
சான்றா கிறாய் !
ஏனெனில் பகுத்தாய்வு நெறி
ஞான ஆலோ சகன்
உனது முக்கிய மந்திரி
மற்றும்
உண்மை ஊழியன்,
மெய் வழிகாட்டி !

இருட்டு வாழ்வில் ஒளியாவது
பகுத்தாய்வு முறை !
சினம் என்பது
ஒளி யிடையே
உலவி வரும் இருட்டு !
ஞான மோடு வாழ்
பகுத்தாய்வு நெறி
வாழ்வுக்கு வழி காட்டப்
பயன் படட்டும் !
உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
ஆயினும்
அறிவு எதுவும் இல்லாமல்
வெறும் பகுத்தாய்வு
நெறி மட்டும்
இருப்பது வீணாகும் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23, 2011)

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *