கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)

This entry is part 36 of 37 in the series 27 நவம்பர் 2011


ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வீட்டை இடிப்பதற்குக் கூலி
விலை மதிப்பற்ற
புதையல் தான் !
கோடரியும் மண் வெட்டியும்
வேலை செய்யும் !
பொறுத் திருந்து நிகழ்வதைப்
பார்த்தால்
பதறிப் போவாய்
நினைத்தது போல் இங்கு
நிகழ வில்லை என
வருத்தம் அடைவாய் !
வாடகை வீடிது
உனக்குச் சொந்தப் பத்திர மில்லை !
ஒத்திக்கு எடுத்த இல்லத்தில்
ஒட்டிய ஒரு கடை !
கிழிந்த ஆடையில்
ஒட்டுத் தையல் போட்டு
உயிர் வாழ முடியாது !
அடித் தளத்தில் புதையல்
செந்நிறத்தில் பொன்னிறத்தில்
மின்னும் கற்கள் !

சீக்கிரம் தகர்த்து உளவு செய்
அடித்தளத்தை
கோடரியால் தோண்டி !
வெளியே வா
தையல் பெண் வேலையை
விட்டு !
கிழிப்புத் தையல் தொழிலின்
விளைவு என்ன வென்று
கேட்கிறாய் ?
குடிப்பதும் தின்பதும் தான் !
மேனியில் போர்த்திய
தடித்தோல் கிழிந்து போகுது
அடிக்கடி !
வயிற்றுக்குத் தீனி போட்டு
கிழியலுக்குத்
தையல் இடுகிறாய் !
கோடரியல் பிளந்த வீட்டின்
அடித்தளம் நோக்கு !
இரு மணிகள் மினுமினுக்கும் !

(முற்றும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *