கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)

This entry is part 18 of 40 in the series 8 ஜனவரி 2012

(On Joy and Sarrow)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“இலையுதிர் காலத்தில் மலைப் பள்ளத்தாக்குகள் ஊடே சென்று நீ முணுமுணுக்கிறாய். அப்போது மரங்கள் உன் இரங்கற் கூக்குரலை எதிரொலிக்கும். குளிர்காலத்தில் உனது அடிமை விலங்குகளை நீ உடைக்கிறாய் ! அப்போது இயற்கையும் உன்னோடு ஒத்துழைத்துப் புரட்சி செய்கிறது. வசந்த காலத்தில் வலுவற்று, ஊக்கமின்றி தூக்கத்திலிருந்து விழிப்புற்று எழுகிறாய் ! அவ்வித மயக்க கொந்தளிப்பில் தூண்டப் பட்டு வயல்களும் எழுந்திட ஆரம்பிக்கின்றன.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

எனக்குத் தெரிகிறது இப்போது !

தனக்கெனச்

செல்வம் மட்டும் சேமித்து

உடைமை ஆக்குவோர்

இடர்ப் படுவர் துயர்ப் பட்டு !

ஆயினும் என் ஆன்மா வுக்கு

ஆறுதல் அளிப்பது

காதலர் விடும் பெரு மூச்சுகள்

வழக்கற்றுப் போன

இசைக் கருவி காட்டிலும் !

இரவு வரும் போது

இதழ்கள் மூடுவது மலரின்

காதல் உறக்கம் !

பொழுது புலர்ந்ததும்

இதழ் திறக்கும் பூக்கள்

இரவியின் முத்தங்கள் ஏற்கும்

வந்து போகும்

முகிற் கண்ணாடி ஏந்தும் !

மலர்களின் வாழ்வே

நம்பிக்கை,

மன நிறைவு, அமைதி

கண்ணீரும் புன்னகையும்

பின்னிய வாழ்வு !

நீர் மறைகிறது ஆவியாகி !

மேலே ஏறுகிறது

முகிலாய் மாறி

மலைகள் மீதும்

பள்ளத்திலும் படியும் வரை !

தென்றலைச் சந்தித்ததும்

மண்மீது மழையாய்ப் பொழிந்து

சென்றிடும் நதியாய்

கடல் நோக்கி வழி நெடுவே

சிந்து பாடிக் கொண்டு !

முகில்களின் வாழ்வே

விடை பெறும் வாழ்வு !

மீண்டும்

ஐக்கிய மடையும் வாழ்வு !

கண்ணீரும், புன்னகையும்

பின்னிய வாழ்வு !

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 5, 2012)

Series Navigationமுனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்புகவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *