தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்

This entry is part 35 of 35 in the series 11 மார்ச் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணீ ரோடு இருந்த
யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ?
என்ன தந்திரம் செய்து மீண்டும்
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?
இந்த இனிய தேன் இரவில்
பூத்துப் பொங்கும் பூங்காவில்
போகுல் மரத்தடி நறுமண அசைவில்
புகுந்தவன் அவனா உன் மனதில் ?

அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே
நம் இதயங்கள் கலந்து
பற்றிக் கொண்டன.
பத்துத் திக்கிலும் காட்சிக் களஞ்சியம்
பூத்துக் குலுங்கும்
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?

காதல் மொழிகள் சிலவற்றை
ஒருவருக் கொருவர்
காதில் ஓதிக் குசுகுசுத்தால் —
அவன் கழுத்தில் சூட
அந்த மலர் மாலையை நீ
அணிவிக்கத் துணிந்தால்,
வசந்த கால முழுமதி இரவு
வந்திடும்
மீண்டும் மீண்டும் !
ஒருபோதும்
திரும்பி மீளாதவன்
உன்னை விட்டு விலகியவனே !

காலம் சாதகமாய் உள்ளது
தவறிய தருணம் சில நிமிடம் !
தாகம் எப்போதும் கொண்ட
ஆத்மா
சூடு போட்டு விடும் !
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?

+++++++++++++++

போகுல்* Bokul / বকুল

Bokul in Bengal, (Mimusops elengi). Praised in traditional Indian medical system (Ayurveda) as analgesic, anti-

thirst, refrigerant, anti-inflammatory. Big, dense tree. Small star shaped white flowers with light, very pleasant

fragrance. Gather the flowers when they fall off the tree and they will remain fragrant for 3/4 days, before totally

drying out. Children sometimes like to chew the fruit for its tangy taste. The fruits support a very noisy cuckoo

population, who keep the area alive with their shrill calls dawn to dusk & in brightly moonlit nights of summer.
Calcutta, India, 20.6.2007

+++++++++++++++++++
பாட்டு : 383 தாகூர் தன் 25 வயதில் எழுதியது (1887)
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 6, 2012
*********************

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

 1. Avatar
  jayashree says:

  உயர்திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு.
  தாகூரின் கவிதைகள் ஒவ்வொன்றும் அபாரம்……காதலை சொல்கிறது….கீதமாய்….
  சில சமயங்களில் ஆத்மாவின் ஓலமாய்….இருந்தாலும் மனக்கூவல் அழகு….அவர் மனதின் தேவதை
  அவருக்கு கற்பனை சுரங்கத்தை காட்டி இருக்க வேண்டும்….அன்பெனும் தேன் ஊற்றில்
  அள்ளி அள்ளித் தரும் ஆழகு…அத்தனையையும் அப்படியே தமிழாக்கி தந்து அதே சுவையை
  சுவைக்க வைத்த உங்களுக்கு நன்று என்ற .வார்த்தைகள் நிரப்பி விடாது நல் வாழ்த்துக்களை…
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *